Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இளமை என்னும் நீரூற்றைப் பருகியதைப் போல உணர .. இப்படி மசாஜ் பண்ணுங்க!
முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி மிக இளமையான தோற்றம் பெறுவதற்காக, முகத்திலே போடப்படும் "பொடாக்ஸ் ஊசி முறைகள்" (Botox injections) மற்றும் அழகியல் மருத்துவத்துறையில் செய்யப்படும் "மைக்ரோ டெர்மாப்ரேஷன்" ( Microdermabrasion) எனப்படும் அறுவை சிகிச்சை முறை, முகத்தின் அழகிற்கு பொருத்தமானதாகவோ மற்றும் அதற்கென ஆகும் செலவு பட்ஜெட்டிற்குள் அடங்குவதாகவோ இல்லை.
எனவே முகத்திற்கான மசாஜ் முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் தான் மிகவும் சிறந்த வழி. இவ்வாறு செய்வதால், முகத்திலுள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, அங்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சுருக்கங்கள் குறைந்து, அழகிய முகத்தோற்றம் அடைய பெரிதும் உதவுகிறது. இதனால் இளமை என்னும் நீரூற்றைப் பருகியதைப் போல் உணர முடியும்.

நெற்றியிலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்கான பயிற்சி முறை:
இரண்டு புருவங்களையும் அடிக்கடி உயர்த்துவதன் மூலம் நெற்றியில் ஆழமான சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க முடியும். மேலும் நடுவிரல் மற்றும் கட்டை விரலை இரு புருவங்களின் மீதும் வைத்து மேல் நோக்கி இழுத்து விட வேண்டும். அத்துடன் இரண்டு புருவங்களையும் குறைந்தது 10 முறை உயர்த்தி உயர்த்தி பயிற்சி செய்யவேண்டும்.
நெற்றிச் சுருக்கங்களை நீக்குவதற்கான பயிற்சி முறைகள்:
காகத்தின் கால்களைப் போன்று அமைந்துள்ள நெற்றிச் சுருக்கங்களை நீக்குவதற்கு, இரண்டு கண்களையும் நன்கு மூடி, இரு புருவங்களையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்படி 3 விநாடிகள் செய்த பிறகு, சில விநாடிகள் ஓய்வெடுத்து பின் மீண்டும் செய்ய வேண்டும்.
தாடை மற்றும் கழுத்திற்கான பயிற்சி முறைகள்:
தரையில் நின்று கொண்டு, கழுத்தை பின்புறம் சாய்த்து மேற்புறக் கூரையை நன்கு கூர்ந்து பார்க்க வேண்டும். அப்படியே இரு உதடுகளையும் மேற்கூரையை நோக்கி முத்தமிடுவது போல நன்கு குவிக்க வேண்டும். இவ்வாறு 5 விநாடிகள் இருந்து, பின் ஓய்வு எடுத்து, பின் மீண்டும் செய்யவும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.
முகத்திற்கான மசாஜ் முறைகள்:
முகத்தை தொடர்ந்து மசாஜ் செய்வதால், தோல் மிக மிருதுவாகவும், உறுதியாகவும் அமைகிறது. "மசாஜ் தெரபி 101" ( Massage Therapy 101) என்ற நூலில் பரிந்துரைத்துள்ளபடி, முகத்தை நன்கு கழுவி விட்டு, முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்க ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசரைத் தடவவும்.
வறண்ட சருமத்திற்கு பூரித கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய் வகைகளையும் (அதாவது, தேங்காய் எண்ணெய்), எண்ணெய் பசையுடைய சருமத்திற்கு நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய் வகைகளையும் (அதாவது, ஆலிவ் எண்ணெய்) தடவவும்.
நீங்களாகவோ அல்லது பயிற்சி பெற்ற ஒருவர் மூலமாகவோ முகத்திற்கு மசாஜ் செய்தாலும், 20 நிமிடங்களுக்கு மேலாக செய்யக் கூடாது. மேலும் மிக மெதுவாக செய்ய வேண்டும். நெற்றியிலும் முகத்திலும் மசாஜ் செய்யும் பொழுது பக்கவாட்டு ( Horizontal) சுருக்க வரிகள் குறைகிறது. கன்னங்களையும் வாய்ப்பகுதியையும் மசாஜ் செய்யும் பொழுது புதிய சுருக்கங்களோ தொய்வோ ஏற்படாமல் காக்கிறது. கழுத்து சதைப்பகுதி வலுவாக இருக்கவும், தொய்வு ஏற்படாமல் இருக்கவும், மெதுவாக மசாஜ் செய்ய மறந்து விட வேண்டாம்.



Click it and Unblock the Notifications