Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
வீட்டில் செடி வளர்க்கிறீர்களா? இலைகள் வாடிப் போகிறதா அதற்கு எந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணம் தெரியுமா?
நமக்கு எப்படி ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறதோ அதே மாதிரி செடிகளுக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது ஏற்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையை பொருத்து இலைகளின் நிறங்கள் மாறுகின்றன. தாவரங்கள் நல்ல படியாக வளர்வதற்கு நிறைய மேக்ரோநியூட்ரியன்கள் அவசியம்.
நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அதே மாதிரி நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாலிப்டினம், போரான், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் தேவைப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்துக்கள் குறைபாடு தாவரங்களில் ஏற்படும் போது இலைகள் மஞ்சள் நிறமாகுதல், வேர்கள் குன்றிப் போதல், இலைகள் முறுக்கப்பட்டு காணப்படுதல், மகசூல் குறைந்து போதல், இலைகளில் துளைகள் ஏற்படுதல், பூ பூக்காமல் காய் காய்க்காமல் இருத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டை எப்படி கண்டறிவது மற்றும் அதை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தாவரங்களில் ஏற்படும் நைட்ரஜன் குறைபாடு
தாவரங்களில் நைட்ரஜன் குறைபாடு என்பது பல வழிகளில் ஏற்படுகிறது. நைட்ரஜன் குறைப்பாட்டால் கீழ் இலைகளில் மஞ்சள் தோன்றுதல், செடியின் உச்சியில் வெளிர் பச்சை இலைகள் தோன்றுதல், வளர்ச்சி குறைந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
காரணங்கள்
நைட்ரஜன் குறைபாடு முதன்மையாக மண்ணின் சமச்சீரற்ற pH ஆல் ஏற்படுகிறது. அதே மாதிரி உங்கள் பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது நைட்ரஜன் நீரில் கரைந்து கழுவப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மண்ணில் நைட்ரஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்
உங்கள் செடியின் நைட்ரஜன் பற்றாக்குறையை போக்க நைட்ரஜன் சார்ந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் சேர்க்கலாம். கரிமப் பொருட்கள் அடங்கிய உரம், தழைக்கூளம் செய்வது போன்றவை நீண்ட காலத்திற்கு நைட்ரஜனை வழங்க உதவுகிறது.
தாவரங்களில் ஏற்படும் பாஸ்பரஸ் பற்றாக்குறை
தாவரங்களில் காணப்படும் முதிர்ந்த இலைகள் தான் முதலில் இத்தகைய பற்றாக்குறைக்கு ஆளாகின்றன. தாவரமானது பொட்டாசியத்தை வளரும் திசுக்களுக்கு நகர்த்துகிறது. பாஸ்பரஸ் பற்றாக்குறையால் இலைகள் ஊதா, வெண்கலம் அல்லது சிவப்பு நிறத்துடன் கரும் பச்சை நிறத்தை பெறுகின்றன. இதனால் தாவரங்களின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை நீடித்தால் இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள், செல் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
காரணங்கள்
மண்ணில் pH ஏற்றத்தாழ்வு மற்றும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு இருத்தல். கடுமையான குளிர் பாஸ்பரஸ் உறிஞ்சுதலை பாதிக்கிறது. தாவரங்கள் இருக்கும் இடத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து இருந்தால் பாஸ்பரஸ் பற்றாக்குறை ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும் : சூப்பர் பாஸ்பேட் போன்ற பாஸ்பரஸ் நிறைந்த சேர்க்கையை சேர்க்கலாம். எலும்பு உணவு அல்லது பாஸ்பேட் ராக் போன்றவற்றை சேர்க்கலாம்.
தாவரங்களில் ஏற்படும் பொட்டாசியம் குறைபாடு
- இலையின் விளிம்புகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இலையின் விளிம்புகள் எரிந்து காணப்படும்.
- இலை நரம்புகளுக்கிடையே குளோரோசிஸ் காணப்படுதல்.
- இலைகளின் அடிப்பகுதியில் ஊதா நிறப் புள்ளிகள் தோன்றுதல்.
- மெதுவான வளர்ச்சி ஏற்படுதல்
காரணங்கள் : மண்ணில் இருக்கும் தவறான pH அளவு, மண்ணில் அதிகமாக சுண்ணாம்புச் சத்து காணப்படுதல்
என்ன செய்ய வேண்டும்: மண்ணில் இருக்கும் பொட்டாசியம் குறைப்பாட்டை சரி செய்ய பொட்டாசியம் நிறைந்த சல்பேட், தக்காளி அல்லது கடற்பாசிகளை செடிகளுக்கு தீவனமாக போடலாம். கெல்ப் சிகிச்சைகள் போன்ற பொட்டாசியம் அடங்கிய கரிமச் சேர்க்கைகளை சேர்க்கலாம்.
தாவரங்களில் ஏற்படும் மக்னீசியம் குறைபாடு
பழைய இலைகளின் நரம்புகளுக்கிடையே குளோரோடிக் போன்று தோன்றும். இலைகள் வெளிர் நிறமாகவும் நரம்புகள் பச்சை நிறத்திலும் காணப்படும். வளர்ச்சி தடைபடும். தாவரத்தின் சில பகுதிகள் அழுகிப் போக வாய்ப்புள்ளது. தக்காளி, ஆப்பிள், உருளைக்கிழங்கு, ராஸ்பெர்ரி மற்றும் ரோடோடென்ட்ரான்கள் போன்ற தாவரங்கள் மக்னீசியம் குறைப்பாட்டை சந்திக்கின்றன.
காரணங்கள்: பலத்த மழை பெய்தால் மக்னீசியம் மண்ணிலிருந்து எளிதாக வெளியேறி விடும். பொட்டாசியம் நிறைந்த மண் இருந்தால் மக்னீசியத்திற்கு பதிலாக பொட்டாசியம் அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தாவரங்களின் கருத்தரித்தல் பாதிக்கப்படும், குளிர் மற்றும் ஈரமான சூழல் முக்கிய காரணமாக அமைகிறது.
என்ன செய்ய வேண்டும்: மெக்னீசியம் குறைபாட்டை சரிசெய்ய, ஃபோலியார் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும். இந்த ஸ்ப்ரே தாவரங்களின் தண்டுகள் மற்றும் வேர்கள் வழியாக விரைவில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. டோலமைட் அல்லது மக்னீசியம் நிறைந்த சேர்க்கையை சேர்க்கலாம்.
தாவரங்களில் ஏற்படும் கால்சியம் குறைபாடு
தாவரங்களில் ஏற்படும் கால்சியம் குறைபாடு செடிகளின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கிறது.
காரணங்கள்: மண்ணின் pH அதிகமாகவோ அல்லது குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது. பொருத்தமற்ற நீர்ப்பாசன முறைகள், ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு ஏற்படுதல் போன்றவை காணப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும் :கால்சியம் நைட்ரேட் போன்ற நீரில் கரையக்கூடிய கால்சியம் மூலத்தைப் பயன்படுத்தலாம். மண்ணில் சுண்ணாம்புச் சத்து , எலும்பு உணவு அல்லது ஜிப்சம் போன்ற கால்சியம் மூலங்களைப் பயன்படுத்தலாம்.
தாவரங்களில் ஏற்படும் சல்பர் குறைபாடு
புதிய இலைகளில் குளோரோடிக் தோற்றம் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், இலைத் தண்டுகள் ஊதா நிறத்தில் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. சல்பர் குறைபாடும் நைட்ரஜன் குறைபாடும் ஒன்று போல் இருக்கும். எனவே இலைகளின் மஞ்சள் நிறம் எங்கு தோன்றுகிறது என்பதை கவனமாக கவனிக்க வேண்டும்
காரணங்கள் :தவறான pH அளவு மற்றும் ஊட்டச் சத்து ஏற்றத்தாழ்வு
என்ன செய்ய வேண்டும் :ஃபோலியார் ஸ்ப்ரேயில் நீர்த்த எப்சம் உப்புகளை (மெக்னீசியம் சல்பேட்) தேர்வு செய்து பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
