Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
'இந்த' அல்டிமேட் பவர் ஸ்மூத்தி... உங்களுக்கு முடி கொட்டுறத நிப்பாட்டி...கிடுகிடுன்னு முடி வளர வைக்குமாம்!
Hair Loss In Tamil: உங்கள் தலைமுடியின் வலிமையையும் நீளத்தையும் அதிகரிக்க எளிதான ஆரோக்கியமான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், இயற்கையான பவர் ஹேர் ஸ்மூத்தியை முயற்சி செய்யலாம். இவை உங்களின் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது.
இன்றைய நாளில் எல்லாருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக முடி உதிர்தல் இருக்கிறது. முடி உதிர்தலுக்கான பவர் ஸ்மூத்தியை பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்படுவதுதான் ஹேர் ஸ்மூத்தி. இது உங்கள் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடியை பராமரிக்க உதவுகிறது.

இந்த பவர் ஸ்மூத்தி பல்வேறு விதைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. சியா விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் மற்றும் தாமரை விதைகள் அனைத்தும் முடி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இந்த பவர் ஹேர் ஸ்மூத்தியை எவ்வாறு தயாரிக்கலாம் மற்றும் அது உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு நன்மைகளை வழங்குகிறது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உடைவதை குறைக்கவும் உதவும். மேலும், சியா விதைகளில் அதிகளவு துத்தநாகம் உள்ளது, அவை முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்களின் சிறந்த மூலமாகும். இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் ஆகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களை வளர்க்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதே சமயம் லிக்னான்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் ஈ உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்த உதவுவதோடு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முக்கியமானது. மேலும், இந்த விதைகளில் இருக்கும் இரும்புச்சத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியமானது.
தாமரை விதைகள்
மக்கான விதைகள் என்று அழைக்கப்படும் தாமரை விதைகளில், புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவற்றில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இது முடி மற்றும் உச்சந்தலையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
ஆனால் ஸ்மூத்தியில் உள்ள பாதாம் மற்றும் டேட்ஸ்கள் அவற்றின் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பாதாம் பயோட்டின் ஒரு சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான கூந்தலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும்.
முடி உதிர்வை தடுக்க உதவும் பவர் ஸ்மூத்தியை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- சியா விதைகள் - 2 டீஸ்பூன்
- ஆளி விதைகள் - 2 டீஸ்பூன்
- சூரியகாந்தி விதைகள் - 2 டீஸ்பூன்
- பூசணி விதைகள்- 2 டீஸ்பூன்
- தாமரை விதைகள் அல்லது மக்கானா- 2 டீஸ்பூன்
- பேரீச்சம்பழம் - 2
- ஊறவைத்த பாதாம் ஒரு கைப்பிடியளவு
செய்முறை
ஸ்மூத்திக்கான விதைப் பொடியை உருவாக்க, விதைகளை கடாயில் போட்டு, அவற்றின் வாசனை போகும்வரை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர், அவற்றை பிளெண்டரில் நன்றாக தூளாக அரைத்துக்கொள்ளவும். இந்த தூளை ஒரு மாதம் வரை குளிர்சாதன பெட்டியில் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்.
உங்களுக்கு தேவைப்படும்போது, பிளெண்டரில் அரைத்த விதை தூளை இரண்டு கரண்டி, இரண்டு பேரீச்சம்பழம் மற்றும் ஒரு சிறிய கைப்பிடி பாதாமுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். அந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து முடியை நன்றாக அலசுங்கள். இதற்கான பலனை நீங்களே காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications

