Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
தலைமுடியை வலுப்படுத்தணுமா? அப்ப தொடர்ந்து 8-12 வாரம் இந்த பாரம்பரிய வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? உங்களின் தலைமுடி பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்களின் தலைமுடிக்கு வழக்கத்தை விட கூடுதல் பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.
தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமானால், தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது மட்டுமின்றி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி உடைவதைத் தடுக்கும், ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்படியான ஒருசில ஹேர் ஆயில் அல்லது மாஸ்க்குகளைப் போட வேண்டும்.

அதுவும் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அவர்களின் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பின்வரும் வைத்தியங்களை தான் பயன்படுத்தினார்கள். அதுவும் இந்த வைத்தியங்களைத் தொடர்ந்து 8-12 வாரங்கள் பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாரம்பரிய வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. நெல்லி எண்ணெய்
* இதற்கு ஒரு கிண்ணத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நற்பதமான நெல்லிக்காயை எடுத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து, குறைவான தீயில் 8-10 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* எண்ணெய் குளிர்ந்ததும், அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலுவடைவதோடு, பளபளவென்றும் இருக்கும்.
2. வெந்தய மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த விதைகளை அரைத்து, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலையில் தடவி 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, தலைமுடி உடைவது குறையும்.
3. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்
* இதற்கு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, தலைமுடியில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படும்.
4. வெங்காய சாறு
* இதற்கு 1 சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். முக்கியமாக இந்த வழியை முயற்சிக்கும் முன், பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
5. கற்றாழை ஜெல் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கால்ப் என்றால் கற்றாழை ஜெல்லுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வந்தால், முடி ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications