Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
வீட்டிலேயே எளிமையாக பெடிக்யூர் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
ஒவ்வொருவருக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதில் குறிப்பாக பெண்களுக்கு தான் அதிக நாட்டம் இருக்கும். அதற்காக அவர்கள் மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று, தலை முதல் கால் வரை பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அதில் மேற்கொள்ளப்படும் ஒன்று தான் பெடிக்யூர். பெடிக்யூர் என்பது கால்விரல் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் ஒன்று.
மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...
இத்தகைய முறையை வாரம் அல்லது மாதம் ஒருமுறை செய்து வந்தால், கால்விரல் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் அந்த பெடிக்யூர் செல்ல நிறைய பணம் செலவழிப்போம். ஆனால் அந்த பெடிக்யூரை வீட்டிலேயே எளிமையாக, பணத்தை அதிகம் செலவழிக்காமல் செய்யலாம். இங்கு அந்த பெடிக்யூர் வழிமுறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

வேண்டிய கருவிகள்
வீட்டில் பெடிக்யூர் செய்வதற்கு, முதலில் அதற்கு தேவையான கருவிகளை வாங்க வேண்டும். அதில் சிறிய வாளி, நெயில் க்ளிப்பர், மெருகேற்ற உதவும் கல், க்யூட்டிகிள் ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் போன்றவை அடங்கும்.

நெயில் பாலிஷ் ரிமூவர்
பெடிக்யூர் செய்யும் முன், கால்விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை, நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தி மறக்காமல் நீக்க வேண்டும்.

பாதங்களை ஊற வைக்கவும்
அடுத்து ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு அல்லது எண்ணெய் சேர்த்து, அதில் கால்களை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

நகங்களை தயார் செய்யவும்
பின்னர் அகன்ற தட்டில் நீரை ஊற்றி, பின் அதில் படத்தில் காட்டியவாறு கால்விரல் நகங்களை ஊற வைத்து குதிங்கால்களை தூக்கி, பின் பிரஷ் கொண்டு குதிங்கால்களை தேய்க்க வேண்டும்.

க்யூட்டிகிள்களை பராமரிக்கவும்
நகங்களை நன்கு ஊற வைத்த பின்னர், க்யூட்டிகிள் ஸ்டிக் கொண்டு, நகங்களின் மேல் உள்ள அதிகப்படியான தோலை தேய்த்து நீக்கிவிட வேண்டும்.

மெருகேற்ற உதவும் கல்
பின்பு மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு பாதங்களை தேய்த்து, பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பிரஷ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.

உலர வைக்கவும்
பிறகு வெதுவெதுப்பான நீரால் பாதங்களை கழுவி, பின் உலர வைக்க வேண்டும். குறிப்பாக, பெடிக்யூர் முடிந்த பின்னர் பாதங்களை நீரில் அதிகம் ஊற வைக்க வேண்டாம். ஏனெனில் அவை சுருக்கங்களை ஏற்படுத்திவிடும்.

நெயில் பாலிஷ் போடவும்
பாதங்கள் நன்கு உலர்ந்த பின்னர் பேஸ் கோட் என்னும் நெயில் பாலிஷ் போட வேண்டும். இதனால் நகங்கள் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். பின்னர் விரும்பிய நிறமுள்ள நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
