Latest Updates
-
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
கோடையில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்!!!
மற்ற காலங்களை விட கோடையில் அதிகம் வியர்ப்பதால், அசௌகரியமாக இருக்கும். எப்போதும் சிடுசிடுவென்று இருப்போம். ஏனெனில் வியர்வை அதிகம் இருப்பதுடன், அதிகப்படியான வெப்பத்தால் உடல் வெப்பமடைந்து எரிய ஆரம்பிக்கும். எனவே இந்த கோடைக்காலத்தை கடப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.
ஆனால் கோடைக்காலத்தில் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இங்கு கோடையில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் அன்றாடம் செய்ய வேண்டியவை சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதன்படி நடந்தால் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

காலையில் குளிக்கவும்
மற்ற காலங்களில் சிலர் காலையில் குளிக்காமல் கூட இருப்பார்கள். ஆனால் கோடையில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், தவறாமல் குளிக்க வேண்டும்.

நறுமணமிக்க சோப்புகள்
குளிக்கும் போது நல்ல நறுமணமிக்க சோப்புகளைப் பயன்படுத்தினால், நம் உடலில் இருந்து நல்ல நறுமணம் வீசும். மேலும் இவை சருமத்தை லேசாக உலர செய்யும். இதனால் வியர்வையினால் சருமம் எண்ணெய் வழிவது போன்று காணப்படாது.

டியோ வேண்டாம்
டியோக்கள் சருமத் துளைகளை அடைத்து, வியர்வை வெளியேறுவதை தடுத்துவிடும். இதனால் புத்துணர்ச்சி தான் குறையும். ஆகவே டியோவிற்கு பதிலாக பெர்ஃப்யூம் பயன்படுத்துங்கள்.

டால்கம் பவுடர்
டால்கம் பவுடரை பயன்படுத்த வேண்டும். இதனால் அவை வியர்வையை உறிஞ்சிவிடும். இதனால் வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

மாலையில் குளிக்கவும்
கோடையில் காலை மட்டுமின்றி, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஒருமுறை குளித்தால், கோடை வெப்பத்தினால் ஏற்பட்ட எரிச்சல் குறைந்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

குளிர்ந்த நீரில் குளிக்கவும்
கோடையில் சுடுநீரில் குளிக்காமல், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலின் வெப்பமானது தணிக்கப்பட்டு, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தினமும் தலைக்கு குளிக்கவும்
கோடைக்காலத்தில் தினமும் தலைக்கு குளிப்பதால், கழுத்துப் பகுதியில் வியர்வையினால் கசகசவென்று இருப்பது தணிக்கப்பட்டு, குளிர்ச்சியுடன் இருக்கும்.

மேக் அப்பை தவிர்க்கவும்
கோடையில் மேக் அப் போடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் மேக் அப் பொருட்கள் சருமத் துளைகளை அடைத்துவிடும். எனவே கோடைக்காலத்தில் இயற்கை அழகில் செல்லுங்கள்.

காட்டன் உடைகள்
கோடையில் சில்க், சின்தடிக் போன்றவற்றை தவிர்த்து, நல்ல காட்டன் உடைகளை அணிந்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இக்காலத்தில் சிம்பிளாக இருப்பது நல்லது.

காலணிகள்
கோடையில் கால்களை மூடியவாறான காலணி தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையினால் கால்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

இயற்கை காற்றை சுவாசியுங்கள்
கோடை வெப்பம் தாங்காமல், பலர் ஏசி அறையிலேயே இருப்பார்கள். அப்படி இருந்தால், புத்துணர்ச்சிக்கு பதிலாக சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே எவ்வளவு தான் வெயில் அடித்தாலும், நிழலில் சென்றாவது இயற்கை காற்றினை சுவாசியுங்கள்.

கோடைக்கால பொருட்கள்
கோடையில் வெளியே செல்லும் போது, தவறாமல் சூரியக்கதிர்கள் நேரடியாக சருமத்தில் படாதவாறு, தொப்பி, ஸ்கார்ப் போன்றவற்றை அணிந்து செல்லுங்கள். ஏனெனில் சூரியக்கதிர்களின் தாக்கம் சருமத்தில் அதிகம் இருந்தால், அது சரும புற்றுநோயை ஏற்படுத்திவிடும். ஆகவே வெயிலில் செல்லும் போது எண்ணெய் அதிகம் இல்லாத சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications