Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சமையலில் பயன்படுத்தப்படும் புளியை உங்க சருமத்தில் இப்படி பயன்படுத்தினால்... சருமம் ஒளிருமாம்!
பொதுவாக இந்திய சமையலை பொருத்த வரை புளி இல்லாமல் எதையுமே சமைக்க முடியாது. புளி சமையலுக்கு மட்டுமல்ல நம் சருமத்திற்கும் தோல் பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. புளி நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
புளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. புளியில் கேட்டசின், AHA, சிட்ரிக் அமிலம், நுண்ணியிர் எதிர்ப்புகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் போன்றவை காணப்படுகிறது. எனவே புளி உங்கள் சருமத்திற்கு இளமையான லுக்கை அளிக்கிறது.

புளியைக் கொண்டு உங்கள் சருமத்தை நீங்கள் மென் மேலும் மெருகேற்றலாம். சரி வாங்க புளியைக் கொண்டு உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் உங்கள் உடலையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தோல் நிறத்தை சீராக்குகிறது
புளியில் AHA மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளன. இந்த சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் உங்கள் சருமத்தின் நிறத்தை சீராக்குகிறது. அதிகப்படியான சரும எண்ணெயை குறைக்கிறது. எனவே புளியை நீரில் ஊற வைத்து அதன் சாற்றை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து வாருங்கள்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது
புளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபிளவனாய்டுகள் காணப்படுகிறது. இது முதுமைக்கு காரணமான ப்ரீ ரேடிக்கலை தடுக்கிறது. உங்கள் சருமத்தில் தோல் எரிச்சல் அல்லது அழற்சி இருந்தால் அதை தணிக்க புளிக் கரைசல் உதவி செய்யும். புளிக் கரைசல் ஒரு பேஷியல் டோனராக செயல்படுகிறது.
கல்லீரல் பாதிப்புக்களை குறைக்க உதவுகிறது
புளிச்சாறு எடுத்துக் கொண்டு வருவது அழற்சியை குறைக்க உதவுகிறது. கல்லீரல் பாதிப்புக்களை குறைக்க உதவுகிறது. இந்த புளிச் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் ஈ இருப்பதால் ஃப்ரீ ரேடிக்கலில் இருந்து கல்லீரலை காக்க உதவுகிறது. இந்த புளிச்சாறு நோயெதிர்ப்பு மண்டபத்தை வலுப்படுத்த உதவுகிறது. இந்த புளிச்சாற்றில் மக்னீசியம், நிக்கல் மற்றும் இரும்புச் சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது
உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவராக இருந்தால் அதற்கு புளி உதவுகிறது. மருத்துவ ரீதியாக உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. இது கொழுப்பு அமில சின்தேஸின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது.
மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது
பலருக்கு மலச்சிக்கல் இருப்பது அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மலச்சிக்கல் உடல் நச்சுகளின் மையமாக மாறுகிறது. இதுவே அவர்களுக்கு சோர்வு மற்றும் மோசமான சருமத்திற்கு வழி வகுக்கிறது. புளியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை மலமிளக்கியாக பயன்படுத்தி வரலாம். உடலுக்கு நன்மை அளிக்கும் ரசமாக உணவில் சேர்த்து வரலாம்.
நுண்ணுயிரால் ஏற்படும் நோய்களை போக்க பயன்படுகிறது
உங்களுக்கு சலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால் அதைக் குணப்படுத்தவும் புளி உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய மருத்துவப் பொருளாக பயன்படுகிறது. எனவே இனி சளி மற்றும் மலேரியாவில் இருந்து விடுபட புளியை நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது
புளி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. புளியில் உள்ள சத்துக்கள் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிராக வீக்கமடைந்த கணைய செல்களை குணப்படுத்த உதவுகிறது. இது புதிய கணைய பீட்டா செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. இழந்த இன்சுலினை மீண்டும் மீட்டெடுக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது
புளியின் விதைகள் கூட உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. புளியை உணவில் சேர்ப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அடைப்பட்ட தமனிகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தமனி சுவர்களில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படக் கூடிய இதய நோய்களையும் தடுக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
