Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
முடி கொட்டுறது நிக்கணுமா? பனை மரம் போல முடி வளரணுமா? அப்ப வெந்தயத்தை 7 நாள் இப்படி யூஸ் பண்ணுங்க!
இன்றைய நாளில் முடி உதிர்தல் பிரச்சனையை எல்லாரும் அனுபவிக்கிறார்கள். குறிப்பாக இளம் வயதிலேயே முடி உதிர்தல் பிரச்சனையை அனுபவிப்பது, உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஏனெனில், முடி உதிர்தல் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு, சந்தையில் பல்வேறு தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்காது. பொதுவாக முடி ஆரோக்கியத்தில் வெந்தயம் மிகவும் பிரபலமாக அறியப்படும் பொருள்.

முடி உதிர்தலுக்கான 7-நாள் வெந்தய முறையை நீங்கள் முயற்சி செய்யலாம். ஏழுநாள் வெந்தய முறையில் நீங்கள் பெறும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
முடி உதிர்தலுக்கான வெந்தய முறை
வெந்தயம் என்பது இந்திய உணவுகளில் பொதுவாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். இது பல நூற்றாண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பது உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது.
வெந்தய விதைகள் உங்கள் முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. அவை முடியின் வேர்களை மீண்டும் உருவாக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. நல்ல பளபளப்பான அடர்த்தியான முடியை பெற வெந்தயம் உங்களுக்கு உதவும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நீங்கள் பயன்படுத்தலாம்.
வெந்தய ஹேர் மாஸ்க் மூலம் உங்கள் முடி வளர்ச்சியை நீங்கள் அதிகரிக்கலாம். வெந்தய பொடியை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தலாம். பலவேறு வகையில், வெந்தயத்தின் முடி நன்மைகளை நீங்கள் பெறலாம். முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்க வெந்தயத்தை 7-நாள் பயன்பாடு முறையாக நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் நாள்: முதல் நாள் இரவு ஒரு கப் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இரண்டாம் நாள்: முதல் நாள் ஊறவைத்த விதைகளை மறுநாள் காலையில் நன்றாக விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், முடியை தண்ணீரில் அலசுங்கள்.
மூன்றாம் நாள்: வெந்தயப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.
நான்காம் நாள்: மூன்று நாளும் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நான்காம் நாள் மீண்டும் வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஐந்தாம் நாள்: இரவில் ஊறவைத்த விதை தண்ணீரை மறுநாள் காலையில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிக்கும்போது, வெந்தய விதையில் உள்ள சாறுகள் முழுவதும் நீரில் இறங்கும். தண்ணீர் குளிர்ந்தவுடன், உங்கள் தலைமுடியை அந்த தண்ணீரில் அலச வேண்டும்.
ஆறாம் நாள்: ஆறாம் நாளில் வெந்தய ஹேர் மாஸ்க்கை முயற்சி செய்ய வேண்டும். வெந்தயப் பொடியை தயிருடன் கலந்து உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து, முடியை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும்.
ஏழாம் நாள்: கடைசி நாளான இன்று வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். நல்ல முடிவுகளைக் காண 4-6 வாரங்களுக்கு இந்த சுழற்சியை மீண்டும் செய்ய வேண்டும். நல்ல பலனை நீங்கள் விரைவில் காணலாம். வெந்தயத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, முடி உதிர்வைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய பிற விஷயங்களும் உள்ளன.
ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழுதல், கெமிக்கல் அதிக இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துதல், வெப்ப-ஸ்டைலிங் கருவிகளைத் தவிர்த்தல் மற்றும் நீரேற்றத்துடன் இருப்பது ஆகியவை உங்கள் முடி ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
இறுதிக் குறிப்பு
முடி உதிர்தலுக்கான ஏழு நாள் வெந்தய முறை, முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வாக இருக்கும். எவ்வாறாயினும், முடிவுகள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடி உதிர்தலுக்கு ஏதேனும் புதிய வைத்தியம் அல்லது சிகிச்சைகளை முயற்சிக்கும் முன் ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை செய்வது எப்போதும் சிறந்தது.



Click it and Unblock the Notifications
