Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
இந்த 4 ராசிக்காரங்க பீனிக்ஸ் பறவை மாதிரியாம்... எந்த தோல்வியும் இவங்க உச்சத்தை தொடுவதை தடுக்க முடியாதாம்...!
அனைவரின் வாழ்க்கையிலும் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்காது. வாழ்க்கையில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் சவால்கள், தடைகள் மற்றும் துன்பமான தருணங்களை எதிர்கொள்வோம். சிலர் தாங்கள் சந்திக்கும் தோல்வியால் தங்களின் மனவலிமையை இழக்கிறார்கள் மற்றும் அதிலேயே முடங்கி விடுவார்கள். ஆனால் சிலர் தங்களின் மனவலிமை மற்றும் மீள்திறனால் தோல்விகளிலிருந்து பீனிக்ஸ் பறவை போல விரைவாக மீண்டு வருவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், தோல்விகளையும் திறம்பட கையாளும் தகுதிகளையும், திறமைகளையும் கொண்டுள்ளனர். அவர்கள் வீழ்ச்சிகளை சந்திக்கும் போது எவ்வளவு விரைவாக தோல்வியை சந்தித்தார்களோ அதைவிட வேகமாக அதிலிருந்து மீண்டு வருவார்கள், இதனால் அவர்களின் வாழ்க்கை எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பீனிக்ஸ் பறவைப் போல மீண்டு வருவார்கள் என்னு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசி போர் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாய் ஆள்கிறார், இது அவர்களை மிகவும் சுறுசுறுப்பான மற்றும் வலிமையான ராசிகளில் ஒன்றாக மாற்றுகிறது. ஒரு நெருப்பு ராசியாக, மேஷ ராசியினர் தங்கள் அதிக ஆற்றல் மற்றும் அச்சமற்ற தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் வழியில் வரும் எந்த சவாலையும் பார்த்து அஞ்ச மாட்டார்கள்.
அவர்களின் மீள்தன்மை என்பது உற்சாகத்துடனும், உறுதியுடனும் துன்பங்களை எதிர்கொள்ளும் திறனில் இருந்து வருகிறது. மேஷ ராசிக்காரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது பின்னடைவுகளிலிருந்து விரைவாக மீண்டு வருவதுதான். அவர்கள் தோல்விகளில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக மீண்டு வந்து புதிய உயரங்களை அடைய அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் இணையற்ற விடாமுயற்சிக்கும், வாழ்க்கையின் சவால்களை எதார்த்தமாக அணுகும் நடைமுறைக்கும் பெயர் பெற்றவர்கள். ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படும் பூமி ராசியாக இருப்பதால், மகர ராசிக்காரர்கள் தோல்விகளைப் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் கையாளும் திறனை இயற்கையாகவேக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சவால்களை நிதானமான மனப்பான்மையுடன் அணுகுகிறார்கள், அவர்கள் ஒருபோதும் தோல்வியால் மனம் தளர்வதில்லை.
தோல்விகளை சந்திக்கும் போது விடாமுயற்சியுடன் செயல்படும் திறனே மகர ராசிக்காரர்களை தனித்து நிற்கச் செய்கிறது. அவர்கள் எளிதில் தோல்விகளை ஒப்புக் கொள்வதில்லை, எவ்வளவு காலம் ஆனாலும், தங்கள் இலக்குகளை நோக்கி அயராது உழைத்துக்கொண்டே இருப்பார்கள். மகர ராசிக்காரர்களின் உணர்ச்சி வலிமையானது, அவர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் எதார்த்த அணுகுமுறையால் வலுப்பெறுகிறது. இது அவர்களை விரக்தியில் வீழாமல், மீண்டுவர உதவுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அசைக்க முடியாத மன வலிமைக்கும், மீள்தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள். அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ஒரு பூமி ராசியாக இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் மன உறுதியுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளனர். தங்களைச் சுற்றி எவ்வளவு குழப்பம் நிலவினாலும், நிலைதடுமாறாமல் உறுதியாக நிற்கும் ஒரு அற்புதமான திறனை அவர்கள் கொண்டுள்ளனர்.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அவர்கள் சந்திக்கும் தோல்விகளை பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வெளிப்புறச் சூழ்நிலைகளால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. ஒருமுறை அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால், தாங்கள் நம்புவதை அடைவதில் உறுதியாகவும் வளைந்து கொடுக்காமலும் இருப்பார்கள். அவர்கள் சந்திக்கும் தோல்விகள் அவர்களின் முயற்சியையும், வேகத்தையும் ஒருபோதும் குறைக்காது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தைரியத்திற்கும், வலிமைக்கும் பெயர் பெற்றவர்கள். வாழ்வின் மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் ஆதாரமான சூரியனால் ஆளப்படுவதால், சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையையும், சக்தியையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர், மேலும் எந்த தயக்கமும் இல்லாமல் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் உள்ளார்ந்த திறனையும் கொண்டுள்ளனர். சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைவர்களாகப் பிறந்தவர்கள், அவர்களின் இணையற்ற மீள்திறன், அவர்களின் தன்னம்பிக்கையிலிருந்து உருவாகிறது.
தோல்விக்குப் பிறகு மீண்டு வரும் திறனே சிம்ம ராசிக்காரர்களை உண்மையாகநா பீனிக்ஸ் பறவையாக மாற்றுகிறது. பின்னடைவுகளைச் சந்தித்த பிறகு தோல்வியுற்றதாக உணரும் மற்ற ராசிக்காரர்களைப் போலல்லாமல், சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் ஒவ்வொரு தோல்வியையும் வளர்ச்சிக்கு ஒரு பாடமாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
