Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
2025-ல் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்!
Venus Make Malavya Rajyog On January 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்.
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைந்து, பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த மங்களகரமான சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

முக்கியமாக பதவி உயர்வு, நிதி நிலையில் உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், 2025-ல் நிகழும் சுக்கிர பெயர்ச்சியின் போது 11 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுக்கிரனின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குறிப்பாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதலித்து வந்தால் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உறவு வலுபெறும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவுகள் நன்கு வலுவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். வீட்டிற்கு ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சுக்கிரனின் ஆசியால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தாயிடமிருந்தும் நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் அவரது முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications