Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
நீங்க பிறந்த ராசி என்னனு சொல்லுங்க? நீங்க எந்த ராசிக்காரர கல்யாணமே பண்ணிக்க கூடாதுனு நாங்க சொல்றோம்...!
காதல் மற்றும் திருமண உறவைப் பொறுத்தவரை சரியான துணை அமையாவிட்டால் அந்த உறவு நரகமாக மாறிவிடும், ஆனால் சரியான துணையைக் கண்டறிவது என்பது மிகவும் சிக்கலானது. பொதுவாக ராசிகளின் அடிப்படையில் இந்திய திருமணங்கள் நிச்சயிக்கப்படுகிறது, ஆனால் ராசி மட்டுமே இறுதி தீர்வாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவரின் ராசி அவர்களின் ஆளுமை மற்றும் அவர்களிடம் உள்ள மற்றவர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் பிடிக்காத விஷயங்கள் போன்றவற்றைப் பற்றி நிறைய சொல்ல முடியும். நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவராக இருந்தாலும் சரி அல்லது உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருந்தாலும் சரி, உங்கள் துணை உங்களை அவர்களிடம் ஈர்க்கும் ஒன்றைக் கொண்டிருப்பார்கள்.

விதிவிலக்காக சிலர் முற்றிலும் பொருந்தாத துணையாக இருப்பார்கள். அவர்கள் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்காது. உங்கள் ராசிப்படி எந்த ராசிக்காரரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் மற்றும் ரிஷபம்
இந்த தம்பதிகளைப் பொறுத்தவரை, ஒருவரையொருவர் காதலிப்பதைத் தவிர, இருவருக்கும் பொதுவானது என்று எதுவும் இல்லை. மேஷ ராசிக்காரர்கள் தன்னிச்சையானவர்கள் மற்றும் வாழ்க்கையை வேகமாக வாழ விரும்புகிறார்கள், அதேசமயம் ரிஷப ராசிக்காரர்கள் ஆச்சரியங்களை எதிர்பார்ப்பதில்லை மற்றும் அவர்களின் ஆறுதல் மண்டலத்திற்குள்ளேயே வாழ விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக இணைந்தாலும், சில காலத்திலேயே அவர்களின் காதல் மறைந்து வாழ்க்கை நரகமாகிவிடும்.
மிதுனம் மற்றும் மீனம்
மீன ராசிக்காரர்களும், மிதுன ராசிக்காரர்களும் வாழ்க்கையை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். காதல் உணர்வு அவர்கள் இருவருக்குமே வேறுபட்டது. மீன ராசிக்காரர்களுக்கு காதல் என்பது உணர்திறன் மற்றும் உணர்வுகளைப் பற்றியது, அதேசமயம் மிதுன ராசிக்காரர்கள் காதலில் இந்த அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்தால், இருவரில் ஒருவர் நிச்சயம் கடுமையான காயங்களுக்கு ஆளாக நேரிடும்.
கடகம் மற்றும் தனுசு
கடக ராசிக்காரர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மற்றும் அனைவரின் மீதும் அக்கறை செலுத்துபவர்கள், மறுபுறம் தனுசு ராசிக்காரர்கள் சாகசக்காரர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள். இவர்கள் இருவரும் இணையும்போது கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் சார்ந்து இருப்பவராகவும், அனைத்திற்கும் அவர்களுக்கே நம்பியிருக்கும் நிலைக்கு செல்லக்கூடும், ஆனால் தனுசு ராசிக்காரர்கள் அதை பெரும் தொந்தரவாக நினைப்பார்கள் மற்றும் அந்த உறவிலிருந்து வெளியேற விரும்புவார்கள்.
சிம்மம் மற்றும் விருச்சிகம்
சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே கிட்டதட்ட ஒரே மாதிரியான ஆளுமைக் கொண்டவர்கள், அவர்களின் உறவில் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது இதுதான். இருவருமே ஒரே ஆளுமையுடன் இருப்பதால் அவர்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இருவருமே ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பதால், ஒரு சிம்ம ராசிக்காரர் தனது விருச்சிக ராசி துணையுடன் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
கன்னி மற்றும் மகரம்
கன்னி ராசிக்காரர்களும், மகர ராசிக்காரர்களும் ஒரு உறவில் இணைந்தால் ஆரம்பத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவர்களின் உறவு நரகமாக மாறும். அதற்கு காரணம் அவர்களின் எதிர்மறையான ஆளுமைகள்தான். கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே வேடிக்கையாகவும், பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள், மகர ராசிக்காரர்கள் இந்த செயல்பாடுகளை முற்றிலும் வெறுக்கிறார்கள். அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க விரும்பும் அவர்களால் இந்த தவறுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை நாளடைவில் கசப்பானதாக மாறுகிறது.
துலாம் மற்றும் கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு ஆழமாக காதலித்தாலும், தங்கள் தனித்துவத்தை யாருக்காவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மறுபுறம் துலாம் ராசிக்காரர்கள் அனைத்திலும் சமநிலையை கடைபிடிப்பவர்கள் மற்றும் முற்றிலும் நேர்மாறானவர்கள்.
அவர்கள் உணர்ச்சிரீதியாக தங்கள் துணையை சார்ந்து இருப்பார்கள், தனியாக இருப்பதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த இரண்டு குணங்களும் ஒருபோதும் ஒன்றாக இணையாது, ஏனென்றால் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவர்கள், இதனால் அவர்கள் வாழ்வில் பல சிக்கல்கள் எழும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
