Latest Updates
-
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் நீதிக்காக போராடும் சத்தியவான்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவர் எப்போதும் நீதியின் பக்கம் நிற்பதுதான் உண்மையான தர்மம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் அதை அவர்களுக்கே தெரியாமல் தவிர்க்கின்றனர். விதிவிலக்காக சிலர் எப்போதும் வலுவான நீதியுணர்வுடன் நீதியின் பக்கம் நிற்பவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சமத்துவம் மற்றும் நீதிக்கான தீவிர ஆதரவாளர்களாக தனித்து நிற்கிறார்கள்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து போராடுகிறார்கள், பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்காகவும் அநீதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வலுவான நீதியுணர்வுடன் அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நியாயம் மற்றும் சமநிலை மீதான உறுதியான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒரு வாதத்தின் இரு பக்கங்களையும் பார்த்து, நடுநிலையைக் கண்டறிய பாடுபடும் உள்ளார்ந்த நீதியுணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் விதிவிலக்கான ராஜதந்திர உணர்வு மற்றும் பச்சாதாபத்துடன், எதிரெதிர் தரப்பினரை ஒன்றிணைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் வலுவான நெறிமுறை அனைத்து சூழ்நிலைகளிலும் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக போராட அவர்களை வழிநடத்துகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள், உண்மை மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள்.அவர்கள் தங்கள் மனதில் பட்டதை பேசவும், அவர்கள் நம்பும் விஷயங்களுக்காகப் போராடவும் எப்போதும் பயப்படுவதில்லை. அவர்கள் கூர்மையான அறிவு மற்றும் வலுவான நீதி உணர்வு மூலம், தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் அநீதியான சூழலிலிருந்து விலகியிருப்பார்கள்.
அவர்கள் நியாயத்திற்காக எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள், பெரும்பாலும் பின்தங்கியவர்களுக்கும் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் துணையாக நிற்கிறார்கள். தனுசு ராசிக்காரர்களின் சாகச மனப்பான்மை அவர்களை சமத்துவம் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவதற்காக வெகுதூரம் பயணிக்கத் தூண்டுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் மீது தீவிர நம்பிக்கைக் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர். கும்ப ராசிக்காரர்கள் அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் இரக்கமுள்ள ஆன்மாக்களாக இருப்பார்கள்.
ஒற்றுமை நிறைந்த மற்றும் அனைவரின் உரிமைகளுக்காகவும் வாதிடும் ஒரு சமூகத்தை உருவாக்க அவர்கள் பாடுபடுகிறார்கள். அவர்களின் தொலைநோக்கு சிந்தனையும் புதுமையான யோசனைகளும், நியாயமான உலகத்திற்கான போராட்டத்தில் சேர மற்றவர்களை ஊக்குவிக்கின்றன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் தைரியம் மற்றும் அச்சமின்மைக்கு பெயர் பெற்றவர்கள். மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் சரியானது என்று நம்புவதற்காக அச்சமின்றி நிற்கும் இயற்கையான தலைவர்கள். அவர்களின் வலுவான நீதி உணர்வு சமத்துவமின்மை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேஷ ராசிக்காரர்கள் பலவீனமானவர்களையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்க தீவிரமான உறுதியைக் கொண்டுள்ளனர், இது அவர்களை நீதிக்கான தீவிர ஆதரவாளர்களாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

