Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சூரிய பெயர்ச்சியால் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Sun Transit In Pisces Make Double Rajyog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். நவகிரகங்களில் சூரியன் ஆன்மா மற்றும் தந்தையைக் குறிக்கிறது. இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பயணித்து வருகிறார். இந்த புதன் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.

இந்த புதனும், சூரியனும் மீன ராசியில் ஒன்றாக பயணிப்பதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இப்படி ஒரே வேளையில் சூரிய பெயர்ச்சியால் புதாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகங்கள் உருவாகியிருப்பது சற்று சிறப்பானது.
சூரியனால் உருவாகியுள்ள இந்த இரட்டை ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த இரட்டை ராஜயோகத்தால் ராஜவாழ்க்கையை வாழ்வார்கள். இப்போது மார்ச் மாத சூரிய பெயர்ச்சியால் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். மேலும் உயர் அதிகாரிகள் உங்களின் சிறப்பான செயல்திறனால் மகிழ்ச்சி அடைந்து, புதிய பொறுப்புக்களை வழங்கலாம்.
வணிகர்கள் சூரியனின் ஆசியால் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, இருவரிடைய பிணைப்பு அதிகரிக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், உடல்நலம் மேம்படும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். மேலும் வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஆர்டர் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications