Latest Updates
-
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
2025-ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சியால் இந்த 9 நட்சத்திரக்காரங்க வாழ்க்கை ஓஹோனு இருக்கப்போகுதாம்...!
Saturn Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் பாவ கிரகம் என்று அழைக்கப்படும் சனி, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு 2025-ல் தனது ராசியை மாற்றுகிறார். அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி கும்ப ராசியிலிருந்து வியாழனின் ராசியான மீன ராசிக்கு சனி இடம் பெயர்கிறது. சனியின் இந்த பெயர்ச்சி பொதுவாக அனைத்து 12 ராசிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
சனிபகவான் அனைவரும் நினைப்பது போல் ஆபத்தையும், பிரச்சனையையும் மட்டுமே தருபவர் அல்ல. சனி நவகிரகங்களில் மிகவும் நீதியுணர்வு வாய்ந்தவர் மற்றும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தகுதி மற்றும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை மட்டுமே அளிக்கிறார்.

ஒருவருக்கு சனிபகவான் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கிறார் என்பது ஜாதகத்தில் சனி எந்த நிலையில் அமர்கிறார் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் சனிப்பெயர்ச்சி சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல காலத்தை அளிக்கப்போகிறார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்(கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்)
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பதினோராம் வீட்டில் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் பதினொன்றாமிடத்தில் சனி அமையப் பெற்றால் வாழ்வில் எல்லா நற்பலன்களும் வந்து சேரும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மக்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை வரப் போகிறது.
சனி அவர்களின் வாழ்வில் பல உயர்வைக் கொண்டு வருகிறார். சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வச் செழிப்பு, நிதி உயர்வு, கனவுகள் பலிக்கும் அதிர்ஷ்டம், அங்கீகாரம் மற்றும் கௌரவம் உள்ளிட்ட அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரும். இதற்கு முன் சனிதோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இனி நல்ல காலம் அமையும் என நம்பலாம். மீனத்தில் சனி இருக்கும் இரண்டரை வருடங்களில் இவர்களுக்கு சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
துலாம்(சித்திரை, விசாகம், ஸ்வாதி)
இந்த சனிப்பெயர்ச்சி காலம் என்பது துலாம் ராசியை சேர்ந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் பெரிய பிரச்சனையில் இருந்து விடுபடும் காலமாகும். கடந்த காலங்களில் ஐந்தாம் வீட்டில் சனியும், எட்டாமிடத்தில் வியாழனும் இருந்ததால் துலாம் ராசிக்காரர்கள் பல இன்னல்களை அனுபவித்து இருப்பார்கள். ஆனால் தற்போது சனி 6-ம் வீட்டை அடைவதால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். மே மாதத்தில், வியாழனும் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இது நிதிரீதியான ஸ்திரத்தன்மை மற்றும் ஆசை நிறைவேறும் காலமாக இருக்கும்.
மகரம்(உத்திராடம், திருவோணம், அவிட்டம்)
மகர ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் இது சனிபகவானின் கோபத்திலிருந்து தப்பிக்கும் காலம். அவர்கள் அனைத்து துறைகளிலும் உயர வேண்டிய நேரம் இது. உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உதவியையும், ஒத்துழைப்பையும்முழுமையாக உணரலாம், எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் சில உதவிகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நன்மைகளைத் தரும் நேரம் இது. ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாட்டுப் பயணச் சந்திப்பும், சனிப் பெயர்ச்சியால் குழந்தைகளின் கல்வியில் உயர்வும் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
