Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சனி-புதன் உருவாக்கும் சக்திவாய்ந்த யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கை செழிப்பா இருக்கப்போகுது..
Saturn Mercury Make Dwadash Yog 2025: பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பலவிதமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் சனி பகவான், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், அது புதனில் இருந்து 30 டிகிரி தொலைவில் இருந்து துவாதஷ் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் 2 மற்றும் 12 ஆவது வீட்டில் இருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் 30 டிகிரி தொலைவில் இருந்தால், துவாதஷ் யோகம் உருவாகும்.

இந்நிலையில் பிப்ரவரி 08 ஆம் தேதி சனி மற்றும் புதனின் நிலையால் துவாதஷ் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது துவாதஷ் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வேலை தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகத்தினால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்திலும், பணியிடத்திலும் நல்ல மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகமானது சாதகமான பலன்களைத் தரும். முக்கியமாக நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இந்த வேலைகள் முடிவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு பதிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பிப்ரவரி 08 முதல் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications