30 ஆண்டுகளுக்கு பின் மீனம் செல்லும் சனிபகவான்: எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்?

Sani Peyarchi 2025 : வேத ஜோதிடத்தில் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக இருக்கும். இதுவரை சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி, அதாவது இன்று மீன ராசிக்குள் நுழைந்துள்ளார்.

அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார். சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்ததால், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குவதோடு, சிலர் சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.

Sani Peyarchi 2025 Saturn Transit In Pisces Effects On 12 Zodiac Signs In Tamil

இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது 2025 சனிப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. மேலும் சனியின் பார்வை 2, 6 மற்றும் 9 ஆவது வீட்டில் விழுகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதோடு வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஒவ்வொரு வேலையிலும் சிறிது தாமதம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் உங்கள் ஜாதகத்தில் சனி பகவானின் நிலை வலுவாக இருந்தால், பணியிடத்தில் உயர்அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். இதனால் நீண்ட காலமாக அலுவலகத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் ஜாதகத்தில் சனியின் 7 ஆவது பார்வை 4 ஆவது வீட்டில் விழுந்தால், ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சனியின் 3 ஆவம் பார்வை வருமான வீட்டில் விழுவதால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அஷ்டம சனியில் இருந்து விடுபடுவதால், சனி பகவான் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தருவார். ஆன்மீகத்தில் நாட்டம் சற்று அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனதில் பயம் அதிகரிக்கும். குறிப்பாக வேலையைப் பொறுத்தவரை, நிறைய சஸ்பென்ஸ் இருக்கும். வாழ்க்கையில் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். மனக்கவலைகள் அதிகரிக்கும். நிதி ரீதியாக பலவீனமாக இருக்கும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். இருப்பினும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குருவின் ஆசியால் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு அடுத்த 2 1/2 காலம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்டுள்ளார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் இருந்த வந்த பணம் நீங்கும். பணிபுரிபவர்கள் வேலையில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். இனிமேல் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டின் சூழல் சற்று மோசமாக இருக்கும். இது உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். இடமாற்றம் அல்லது வேலை மாற்றத்தை சந்திக்க நேரிடும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை மற்றும் வணிகத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். சனி பகவானின் அருளால் வாழ்வில் புதிய தொடக்கத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்குகிறது. அதுவும் சனியின் பார்வை 4, 8 மற்றும் 11 ஆவது வீட்டில் விழுகிறது. இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடிவும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் பெரிய லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் தொடங்குகிறது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை காண்பார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல பலன் கிடைக்கும். வேலையில் எந்த முடிவுகளையும் எடுப்பதாக இருந்தால், நன்கு யோசித்த பின் எடுக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, March 29, 2025, 23:41 [IST]
Desktop Bottom Promotion