Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
18 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் ராகு-செவ்வாய்: இன்னும் 3 நாட்களில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Rahu Mars Conjunction 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தனது நிலைகளை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் தற்போது மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமாக கருதப்படும் ராகு பயணித்து வருகிறார். சுமார் 18 ஆண்டுகள் கழித்து ராகு இந்த கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் கும்பத்தில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது கும்பத்தில் ஒன்றிணையும் ராகு செவ்வாயால் நல்ல பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் பல புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரின் முதலீடுகளை செய்தால், எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணத்தைப் பெறுவார்கள். தினசரி வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பேச்சால் பல முக்கியமாக வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த சேர்க்கை காலத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தாய் தந்தையுடனான உறவு வலுபெறும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications