Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதுக்கு பிறகு ராஜயோகம் வருமாம்... உங்க நட்சத்திரம் இதுல இருக்கா?
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி போலவே அவர்களின் நட்சத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் மற்றும் ஆளுமைப் பற்றி தெரிந்து கொள்ள நட்சத்திரமும் முக்கியமானதாகும். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறிவரக்கூடியது. ஒருவேளை நீங்கள் இன்றுவரை வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்தால் அதற்கு உங்களின் ஜாதகமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் துன்பம் எப்போதுமே நிரந்தரமானதல்ல என்பதை மறந்து விடக்கூடாது. சிலருக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதுக்கு பிறகுதான் ராஜயோகம் பிறக்கும். குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் 40 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதனால் அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் 40 வயதுக்கு மேல் ராஜாவாக வாழ்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

உத்திரம்
40 வயது வரை உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல சவால்களையும், தடங்கல்களையும் சந்திப்பார்கள். அவர்கள் ஆசைபட்ட பல விஷயங்களை அடைய முடியாமல் போகலாம். ஆனால் 40 வயதிற்குப் பிறகு, இந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்துவிடும். 40 வயதுக்கு பிறகு இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பல நிதி நன்மைகள் காத்திருக்கின்றன. வேலையில் நல்ல உயர் பதவி பெறுவார்கள், அதிர்ஷ்டமும்ம் செழிப்பும் அதிகரிக்கும்.
இந்த நட்சத்திரங்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தினால் பலரது நன்மதிப்பைப் பெறலாம். இது அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தையும் அடைய உதவும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் 40 வயதுக்கு பிறகு முடிவுக்கு வரும்.
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 40 வயது வரை சிறிய விஷயங்களுக்கு கூட கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள். கையில் போதுமான பணம் இருந்தாலும், பல்வேறு பிரச்சனைகளால் அவர்களால் விரும்பிய வாழ்க்கையை அடைய முடியாமல் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் 40 வயதிற்குப் பிறகு இந்தக் கஷ்டங்கள் நீங்கும் நாட்களைப் பெறுவார்கள்.
புதிய நிலம் வாங்கி அதில் வீடு கட்டலாம். 40 வயதுக்குப் பிறகு இந்த நட்சத்திரக்காரர்கள் வியாபாரத்தில் பிரகாசிக்கலாம். மேலும். குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகலாம். அவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்வை நடத்த வாய்ப்புள்ளது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை 40 வயதுக்கு மேல்தான் தொடங்கும்.
புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் 40 வயது வரை பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். 40 வயதுக்கு முன்பே இந்த நட்சத்திரக்காரர்கள் பலரிடம் கடன் வாங்கி வாழ வேண்டியிருக்கும். இருப்பினும், 40 வயதிற்குப் பிறகு, இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பல சாதனைகள் காத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக மேம்படுத்த முடியும்.
அவர்களைப் பார்த்து சிரித்தவர்கள் அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து வாய்பிளப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த நட்சத்திரங்கள் 40 வயதிற்குப் பின் நல்ல மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த நட்சத்திரங்கள் பல வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.
உத்திராடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 40 வயது வரை நல்ல சம்பளம் தரும் வேலை கிடைக்காமல் இருப்பது மன உளைச்சலை அதிகரிக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் வீட்டுச் செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் 40 வயதிற்கு பிறகு முடிவுக்கு வந்துவிடும். இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிநாடு சென்று சம்பாதிக்க வாய்ப்புள்ளது. 40 வயதுக்குப் பின் அவர்கள் நல்ல நிதி நிலையை அடைவார்கள். அதேபோல் அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, ஆடம்பரமான கார், பெரிய வீடு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
