Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 3 தேதிகளில் பிறந்த ஆண்கள் பிறவியிலேயே அதிபுத்திசாலிகளாம்... வெற்றியும், புகழும் இவர்களை தேடிவருமாம்...!
நியூமராலஜி படி ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து அவரது விதி எண்ணைக் கணக்கிடுவதன் மூலம், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும், அவர்களின் ஆளுமைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத்தில் சில தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள், குறிப்பாக இந்த குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள், வெற்றி அவர்களை தேடிவரும்.
இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள், அந்த குறிப்பிட்ட எண்ணை ஆளும் கிரகத்தின் செல்வாக்கால் இந்த சிறப்பான ஆளுமையை அடைகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் விதிவிலக்கான புத்திசாலியாகவும், அவர்களின் குடும்பங்களுக்குப் பெருமை சேர்க்கும் நபர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த தேதியில் பிறந்த ஆண்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் விதிஎண் 1-யைக் கொண்டுள்ளனர். சூரியனால் ஆளப்படும் இவர்கள் தன்னம்பிக்கை, ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் நேர்மையானவர்கள். அவர்கள் தங்களின் விதிவிலக்கான புத்திசாலித்தனம், புதுமை மற்றும் முற்போக்கான சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் வழக்கத்திற்கு மாறாக சிந்திக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் அவர்களின் துறைகளில் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக மாறுகிறார்கள். அவர்களின் விரைவான புத்திசாலித்தனம், கூர்மையான மனம் மற்றும் பகுப்பாய்வு செய்யும் தன்மை ஆகியவை சிக்கலான பிரச்சினைகளை எளிதாக தீர்க்க உதவுகின்றன மற்றும் வாழ்க்கையில் எளிதாக வெற்றியை அடைய உதவுகின்றன.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 3 உள்ளது. குருபகவானால் ஆளப்படும் இந்த எண் ஞானத்தைக் குறிக்கிறது. இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கிறார்கள் மற்றும் குடும்பத்தின் வறுமையை முடிவுக்கு கொண்டுவருபவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் விரைவான புத்திக்கூர்மை, பல்துறை திறன் மற்றும் தகவமைப்புத் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் புதிய கருத்துகளையும், யோசனைகளையும் விரைவாகப் புரிந்துகொள்ளும் சுறுசுறுப்பான மூளையைக் கொண்டுள்ளனர். அவர்களின் ஆர்வமும் கற்றல் மீதான அன்பும் அவர்களை பல்வேறு விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது, இதனால் அவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக மாறுகிறார்கள்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆக உள்ளது. கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் இவர்கள் மிகவும் புத்திசாலிகள். துணிச்சலான மற்றும் கடின உழைப்பாளிகளான இவர்கள், சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சூழலுக்கு ஏற்ப எளிதில் தகவமைத்துக் கொண்டு, வெற்றிக்கு வழி வகுக்கின்றனர்.
அவர்கள் தங்களின் தீவிர ஆர்வம் மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மனித உளவியல் மற்றும் நடத்தை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் விதிவிலக்கான புத்திசாலியாக மாறுகிறார்கள். எந்தவொரு விஷயத்தின் மையத்தையும் ஊடுருவி, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் அவர்களின் திறன் ஈடு இணையற்றது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
