Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. பணக்காரராக உங்க கூட எந்த பொருளை வெச்சுக்கணும்-ன்னு சொல்றோம்..
Numerology: யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது? நிச்சயம் ஒவ்வொருவருமே அந்த ஆசை இருக்கும். பணப் பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அதற்காக தான் அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அப்படி கஷ்டப்படடு சம்பாதிக்கும் பணம் கைக்கு வந்த வேகத்திலேயே நிறைய பேருக்கு செலவாகிவிடும். இன்னும் சிலர் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், அந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் இருப்பர். உங்களின் நிலைமையும் அப்படி தானா?

அப்படியானால் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கவும், கையில் பணம் குவியவும் ஜோதிடத்தில் ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அதுவும் ஒருவரது பிறந்த தேதியின் படி, அந்நபர் குறிப்பிட்ட பொருளை தன்னுடன் வைத்திருப்பதன் மூலம் பணம் தேடி வருவதோடு, தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து வாழ்க்கை செழிப்பாக மாறும் என்பது தெரியுமா?
எண் கணித நிபுணரான சப்னா வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த தேதிப்படி ஒருவர் எந்த பொருளை தன்னுடன் வைத்துக் கொண்டால் பணக்காரராவார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். நீங்கள் உங்கள் பிறந்த தேதிப்படி எதை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
விதி எண் 1
நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருந்தால், உங்களுடைய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செல்வந்தராக விரும்பினால், எப்போதும் மோதிரம், வளையல் போன்ற ஏதாவது ஒரு தங்க ஆபரணத்தை அணிந்திருக்க வேண்டும் அல்லது காப்பர் நாணயத்தை எப்போதும் தனது பையில் வைத்திருக்க வேண்டும்.
விதி எண் 2
நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுடைய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், கையில் பணம் எப்போதும் நிலைத்திருக்கவும் வெள்ளி ஆபரணங்கள் அல்லது வெள்ளி நாணயத்தை வைத்திருக்க வேண்டும்.
விதி எண் 3
நீங்கள் 2, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுக்கான எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவும், செல்வம் பெருகவும் தினமும் குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குளிக்க வேண்டும்.
விதி எண் 4
நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுடைய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் வைக்கும் பர்ஸ் அல்லது பையில் 4 மிளகை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இப்படி வைத்திருப்பதனால் பையில் பணம் பெருகும்.
விதி எண் 5
நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுக்கான எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பையில் எப்போதும் 5 ஏலக்காயை வைத்திருக்க வேண்டும். நறுமணமிக்க இந்த ஏலக்காய் பணத்தை ஈர்க்கும் ஆற்றலைப் பெற்றதாக கூறப்படுகிறது.
விதி எண் 6
நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுக்கான எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பர்ஸ் அல்லது பணம் வைக்கும் பையில் 2 துண்டு பட்டையை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது அதிர்ஷ்டக் கதவை திறந்து, செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கும்.
விதி எண் 7
நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுக்கான எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் கையில் எப்போதும் ஒரு மெட்டல் ஸ்டாப் கொண்ட கைக்கடிகாரத்தை அணிந்திருக்க வேண்டும். இது வெற்றியைத் தருவதோடு, பண வரவையும் அதிகரிக்கும்.
விதி எண் 8
நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுக்கான எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பர்ஸ் அல்லது பணப்பையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். மேலும் வீட்டிலும் மயிலிறகை வைத்திருந்தால், செல்வம் அதிகரித்து, பண பிரச்சனைகள் தீரும்.
விதி எண் 9
நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களுடைய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களுடன் எப்போதும் குங்குமப்பூவை வைத்துக் கொள்வதோடு, உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வதும், அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications