Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
உங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க.. எந்த தொழில் செஞ்சா கொடிகட்டி பறப்பீங்க-ன்னு சொல்றோம்..
Numerology And Profession: ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறக்கும் போதே கிரகங்களின் நிலைகளைக் கொண்டு அந்நபரின் ராசி கணிக்கப்படுகிறது. அந்த ராசியைக் கொண்டு அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை போன்ற பலவற்றை கணிக்க முடியும். அப்படிப்பட்ட ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம்.
இந்த எண் கணிதம் என்பது எண்களின் அடிப்படையில் ஒருவரது குணாதிசயம், எதிர்காலம், தொழில் வாழ்க்கை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத்தின் படி, ஒவ்வொரு எண்ணும் தனித்துவமான ஆற்றல்கள் மற்றும் பண்புகளுடன் தொடர்புடையது. இந்த எண்கள் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு அந்நபர் எந்த தொழிலை செய்தால் அதில் கொடிக்கட்டி பறப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா? எண் கணித நிபுணர் ஸ்வேதா சுரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1-9 வரையிலான வாழ்க்கை பாதை எண்களுக்கான சிறந்த தொழில்கள் என்னவென்பது குறித்து கூறியுள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
வாழ்க்கை பாதை எண்
அதற்கு முதலில் ஒருவர் தங்களின் வாழ்க்கை பாதை எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் வாழ்க்கை பாதை எண்ணை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் பின்வருமாறு கணக்கிடுங்கள். உதாரணமாக ஒருவர் 25-12-1996 -ல் பிறந்திருந்தால், அந்நபரின் வாழ்க்கை பாதை எண் 2+5+1+2+1+9+9+6=35; 3+5=8. எனவே இந்நபரின் வாழ்க்கை பாதை எண் 8 ஆகும். இப்போது எண் கணித நிபுணர் ஸ்வேதா சுரேகா கூறிய ஒவ்வொரு வாழ்க்கை பாதை எண்களுக்கான சிறந்த தொழில் என்னவென்பதைக் காண்போம்.
எண் 1
வாழ்க்கை பாதை எண் 1-க்கு உரியவர்கள் குழு தலைவர், ராணுவ அதிகாரி, அரசியல் தலைவர், புதுமைப்பித்தன், தலைமை நிர்வாக அதிகாரி, கண்டுபிடிப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நிறுவனர் போன்றவற்றில் இருந்தால், தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 2
வாழ்க்கை பாதை எண் 2-க்கு உரியவர்கள் மீடியேட்டர், ஆலோசகர், ராஜதந்திரி, திருமண பொருத்தம் செய்பவர், கவுன்சலர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், கலைஞர், செல்வாக்கு செலுத்துபவர், ஆடை வடிவமைப்பாளர், ஜோதிடர் போன்ற துறைகள் பொருத்தமாக இருக்கும்.
எண் 3
வாழ்க்கை பாதை எண் 3-க்கு உரியவர்களுக்கு ஆசிரியர், வழக்கறிஞர், பொது பேச்சாளர், மருத்துவ துறை, சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங், எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்தும் கலைஞர் போன்றவை சிறந்ததாக இருக்கும்.
எண் 4
வாழ்க்கை பாதை எண் 4-க்கு உரியவர்கள் ஆசிரியர், பத்திரிகையாளர், பொறியாளர், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில்நுட்பம் தொடர்பான துறையில் இருந்தால், சிறந்து விளங்குவார்கள்.
எண் 5
வாழ்க்கை பாதை எண் 5-க்கு உரியவர்கள் சேல்ஸ் மேன், எந்த வகையான வணிகம், டிராவல் ப்ளாக்கர், நடிகர், இசைக்கலைஞர் போன்றவற்றில் இருந்தால், செழித்து முன்னேறி வருவார்கள்.
எண் 6
வாழ்க்கை பாதை எண் 6-க்கு உரியவர்கள் கட்டிடக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், பியூட்டி இன்ப்ளூயன்சர், மேக்கப் கலைஞர், நகைகள் அல்லது ஆடம்பர பிராண்ட், கலைஞர் போன்றவை சிறந்ததாக இருக்கும்.
எண் 7
வாழ்க்கை பாதை எண் 7-க்கு உரியவர்களுக்கு ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், ஆன்மீக ரீதியாக குணப்படுத்துபவர், மறை அறிவியல், மருத்துவ துறை, ஆசிரியர் போன்றவை ஏற்றதாக இருக்கும்.
எண் 8
வாழ்க்கை பாதை எண் 8-க்கு உரியவர்கள் நிதி மேலாளர், முதலீட்டாளர், ரியல் எஸ்டேட், கட்டுமானம், வங்கியாளர், எச்ஆர், நிர்வாகம் போன்றவற்றில் இருந்தால், கொடிகட்டி பறப்பார்கள்.
எண் 9
வாழ்க்கை பாதை எண் 9-க்கு உரியவர்கள் விளையாட்டு, ராணுவம் தொடர்பான வேலை, சுகாதார துறை, தொழில்நுட்பம், உணவு, கட்டுமானம், ஊக்கமளிக்கும் பேச்சாளர் போன்றவற்றில் தங்களின் தொழிலை அமைத்துக் கொண்டால், சிறந்து திகழ்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications