Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் பிப்ரவரி 24 முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Mars Direct In Gemini 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எதையும் துணிச்சலோடு செய்வதோடு, தைரியமாகவும் இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருந்தால், அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் தற்போது செவ்வாய் வக்ர நிலையில் உள்ளார். இதனால் செவ்வாயால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் தடைபட்டு, வாழ்க்கையில் எதையும் சமாளிக்கும் தைரியம் இல்லாமல், பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வரலாம்.

இந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, திடீர் நிதி ஆதாயம் கிடைப்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை அல்லது வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்டகால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாகி, கையில் பணம் அதிகம் சேரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபமும், நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நிறைய பணம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் பிரபலமாவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications