Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
guru pushya yogam 2024: குரு புஷ்ய யோகம் 2024: செல்வம் பெருக இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்..
guru pushya yogam 2024: வியாழக்கிழமையன்று மிகவும் அரிதான குரு புஷ்ய யோகம் கூடி வருகிறது. இந்த நாளில் குரு பகவானை வணங்கினால் நீங்கள் கோடீஸ்வரராகும் யோகம் தேடி வரும்.. குரு புஷ்ய யோகம் (செப்டம்பர் 26ஆம் தேதி) நாளை வியாழன் அன்று உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.
புஷ்ய என்பது பூசம் நட்சத்திரம் ஆகும்.. வியாழக்கிழமை அன்று பூசம் நட்சத்திரம் வரும்போது, குரு புஷ்ய யோகம் உண்டாகும். ஜோதிடத்தின் படி, குரு புஷ்ய யோகத்தின் போது, நீங்கள் வெற்றியை பெறுவீர்கள்.. இந்த யோகத்தில் செய்யும் வேலையால் கிடைக்கும் பலன்கள் நீண்ட காலமாம் உங்களுக்கு நீடித்து இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன..

குரு புஷ்ய யோகத்துடன், சர்வார்த்த சித்தி யோகமும், அமிர்த சித்தி யோகமும் இணைந்த அரிய வகையும் உருவாகியுள்ளது. அப்படி குரு புஷ்ய யோகத்தில் சில வேலைகளைச் செய்தால் நிதி பிரச்ச்னைகள் நீங்கி சொத்துக்கள் குவியும்.. அப்படி செல்வமும் செழிப்பும் பெருக, குரு புஷ்ய யோகத்தில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
குரு புஷ்ய யோகம் என்றால் என்ன?
குரு புஷ்ய யோகம் என்பது குருவிற்கு உரிய நாளான வியழக்கிழமையில் பூசம் நட்சத்திரம்மும் சேர்ந்து வருவதுதான் குரு புஷ்ய யோகம் ஆகும்.. வியாழக்கிழமையன்று மிகவும் அரிதான குரு புஷ்ய யோகம் கூடி வருகிறது. அந்த நாளில் சில முக்கியமான இந்த வேலைகளைச் செய்து வந்தால் நல்லது..
குரு புஷ்ய யோகம் எப்போது?, எவ்வளவு காலம்?
குரு புஷ்ய யோகம் செப்டம்பர் 26 அன்று இரவு நேரத்தில் ஏற்படுகிறது. புஷ்ய நட்சத்திரம் இரவு 11:34 மணிக்கு தொடங்குகிறது, இது செப்டம்பர் 27 ஆம் தேதி அதிகாலை 1:20 வரை நீடிக்கும். ஆனால் புதிய நாள் சூரிய உதயத்துடன் தொடங்கும். அதனால் குரு புஷ்ய யோகம் செப்டம்பர் 26 அன்று இரவு 11:34 முதல் மறுநாள் காலை 06:12 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
குரு புஷ்ய யோகத்துடன் அமிர்த சித்தி யோகமும் உருவாகிறது. வியாழன் அன்று முழுவதும் சர்வார்த்த சித்தி யோகம் இருக்கும். இந்த இரண்டு யோகங்களும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
குரு புஷ்ய யோகத்தின் போது இந்த 5 காரியங்களைச் செய்யுங்கள்
1. குரு புஷ்ய யோகம் அன்று தங்கம், நகைகள், வீடு, சொத்து வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இவற்றைச் செய்தால், உங்கள் செல்வம் பெருகும், அது நீண்ட காலம் உங்களிடம் இருக்கும்.
2. இந்த யோகத்தில் புதிய கடை அல்லது புதிய வேலையை ஆரம்பிக்கலாம். நம்பிக்கைகளின்படி, இந்த பணிகளில் நீங்கள் வெற்றி பெறலாம். இதனால் உங்கள் நிதி நிலையையும் பலப்படுத்தும்.
3. குரு புஷ்ய யோகத்தில் லட்சுமி தேவியையும், விஷ்ணு பகவானையும் வழிபடுவது நல்லது.. லட்சுமி தேவிக்கு கீர், பாலில் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் துளசி இலைகள், பஞ்சாமிர்தம், வெல்லம் போன்றவற்றை விஷ்ணுவுக்கு வழங்கவும்.
4. கனக்தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும். லட்சுமி நாராயணரின் அருளால் உங்கள் செல்வம் பெருகும்.
4. குரு புஷ்ய யோகம் உருவாகும் போது நீங்கள் விரும்பினால் மஞ்சள் கூட வாங்கலாம். மஞ்சளானது விஷ்ணு பகவானுக்கும் தேவ குரு பிருஹஸ்பதிக்கும் பிரியமானது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை பலப்படுத்தும்.
5. குரு புஷ்ய யோகத்தின் போது வெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி யந்திரத்தையோ அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சதுரப் பகுதியையோ வாங்க வேண்டும். அவரை வணங்குங்கள். உங்களின் நிதி நெருக்கடி நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.
இம்முறை இரவு நேரத்தில் குரு புஷ்ய யோகம் உருவாகிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் வாங்கும் பொருளை தேர்வு செய்து குரு புஷ்ய யோகத்தின் போது பணம் செலுத்தலாம். இதன் மூலம், உங்கள் கொள்முதல் குரு புஷ்ய யோகத்தில் இருக்கும், அதன் பலன்களைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications