Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 முட்டையும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி குருமா செய்யுங்க...சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...
Egg Potato Masala Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் செட்டாகுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம். ஆனால் இந்த மாதிரி முட்டை குழம்பு செய்து பாருங்க வழக்கமாக இல்லாம சுவையும் சூப்பரா இருக்கும்.
இந்த முட்டைக் குழம்பில் உருளைக்கிழங்கும் சேர்த்து செய்யப்படுவதால் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். உங்களுக்கு முட்டை குருமா மிகவும் பிடிக்குமென்றால் ஒருமுறை இந்த உருளைக்கிழங்கு முட்டைக் குருமாவை முயற்சித்துப் பாருங்கள். இந்த முட்டைக் குருமா செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு சுவையும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு முறை செய்தால் இந்த குருமாவை அடிக்கடி செய்ய சொல்லி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு முட்டைக் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு முட்டைக் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 முட்டை
- 3 உருளைக்கிழங்கு
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் சீரகம்
- 2 பச்சை ஏலக்காய்
- 1கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 பெரிய தக்காளி நறுக்கியது
- 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- ½ காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
- 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- முட்டைகளை வேகவைத்து, ஓடுகளை உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கத்தியால் முட்டையை லேசாக அறுத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களின் சுவைகள் அனைத்தும் முட்டைகளில் இறங்க வேண்டுமெனில் இதை அவசியம் செய்ய வேண்டும். அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பின்னர் சீரகம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்துப் பொரிய விடவும்.
- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் குழைவாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். இதை 2 முதல் 3 நிமிடம் வரை வதக்கவும்.
- நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- உருளைக்கிழங்குகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். மூடி வைத்து, உருளைக்கிழங்குகள் மென்மையாகும் வரை மிதமான மிதமான தீயில் வேகவிடவும்.
- இப்போது வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து, கிரேவி கெட்டியாகும் வரை மூடி வைத்து சமைக்கவும். அதிக கிரேவி தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கவும் அல்லது சைடிஷ் போல விரும்பினால் தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- சுவையை சரிபார்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- மூடி வைத்து அடுப்பை அணைத்து விடவும். உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகள் மசாலா சுவையை நன்கு உறிஞ்சுவதற்காக சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான முட்டை உருளைக்கிழங்கு குருமா ரெடி. இது சாதத்திற்கு மட்டுமின்றி தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications