Mars Transit In Gemini On 02 August 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியில் செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

Advertisement

குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்கு தெரியும். செவ்வாயில் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும், சிலருக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாகவும் இருக்கும். இப்போது ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சியால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இந்த 3 ஆம் வீடு தைரியம், வீரம் மற்றும் தகவல் தொடர்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

Advertisement

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, உற்சாகம் போன்றவை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நன்மை தரக்கூடியதாகவும் இருக்கும். லாப வீட்டில் செவ்வாய் இருப்பதால், வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. செல்வாக்குமிக்கவர்களின் நட்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புக்கள் தேடி வரலாம்.

Advertisement

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடைவீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இக்காலத்தில் கிடைக்கும். முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல் நலம் மேம்படும்.

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நேர்மறையான மற்றும் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் வாக்குவாதத்தை தவிர்த்து, பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)