For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!

By John
|

ஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவறு இழைக்கப்பட்டது என்ற காரணத்திற்காக நாம், அனைவரையும் அவ்வாறு எண்ணுவது தவறு. அதுவும், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து பெண்களை இகழும் போக்கு அதிகரித்து வருவது கூட இதற்கு ஓர் காரணமாக கூறலாம்.

நம் வீட்டிலும், உடன்பிறந்தோர், தாய், அண்ணி என எவ்வளவோ பெண்கள் இருக்க, நாம் மற்ற வீட்டு பெண்களை மிகவும் தரம் தாழ்த்திக் குறிப்பிடுவது, எண்ணுவது தவறு என்பதை விட அறியாமை என்று தான் கூற வேண்டும். கலாச்சார மாற்றத்தில் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டதைப் போல, பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள நூறு சதவீத உரிமை உண்டு.

அத்துமீறல்கள் தவறு தான். ஆனால் வற்புறுத்துதல், அடக்கியாள நினைப்பது அதை விட தவறான அணுகுமுறை. பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரிவோர், ஷாப்பிங் மால்களில் பணிப்புரிவோர் போன்றவர்கள் தான் பல வன்கொடுமைகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் ஆளாகின்றனர். உண்மையில், அவர்களில் பலர் தான் வீட்டிற்காகவும், தன்னிலை உயர்வதற்காகவும் உழைத்து வருகின்றனர்....

இனி, எந்த சில விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷர்ட் ஸ்கர்ட்

ஷர்ட் ஸ்கர்ட்

அரைக்கால் உடை அணிந்து ஆண் சாலையில் நடந்து வந்தால் தவறாக பாராத நமது பார்வை. ஏன் அதே ஷர்ட் ஸ்கர்ட் அணிந்து வரும் பெண்ணை மட்டும், உடனே தவறான கண்ணோட்டத்திலும், அவள் தவறானால் என்பது போலவும் எண்ணுகிறோம்?

ஆண் நண்பர்கள்

ஆண் நண்பர்கள்

ஆண்களுக்கு பல பெண் தோழிகள் இருந்தால் அது கெத்து, அதுவே, பெண்களுக்கு பல ஆண் தோழர்கள் இருந்தால் அவள் வேறு மாதிரியானவள்? இது எப்படி நிதர்சனம் ஆகும். இதில் எங்கு சமநிலை இருக்கிறது.

சாட்டிங்

சாட்டிங்

நாள் முழுக்க ஓர் ஆண் தனது சமூக வலைத்தளம், மொபைல் போன்றவற்றில் சாட்டிங் செய்தால் அது தவறல்ல, அதுவே ஓர் பெண் செய்தால் மாட்டும் தவறா? ஏன் அவளுக்கு தோழிகளும், உறவினர்களும் இருக்கவே மாட்டார்களா என்ன...

இரவு நேரம் வெளியே செல்லுதல்

இரவு நேரம் வெளியே செல்லுதல்

பிறந்தநாள் போன்ற சிறப்பு கொண்டாட்டங்களில் ஆண்கள் இரவு பங்கெடுத்துக் கொண்டு சந்தோஷமாய் இருக்கும் போது, அதை பெண்கள் செய்தால் மட்டும் ஏன் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? அவர்களுக்கு அந்த நேரத்தில் பாதுகாப்பு கருதி யோசித்தால் தான் நாம் ஆண்மகனே தவிர, அவளை வேசியாக எண்ணி யோசிப்பது அல்ல.

நடிப்பதில் ஆர்வம்

நடிப்பதில் ஆர்வம்

நமது திரையுலகம் தான் இதற்கு பெரும் காரணம். ஓர் பெண் நடிக்க ஆசைப்பட்டால், பெரும்பாலும், முதலில் அவர்களை ஆடை அவிழ்க்க கூறு பழகிவிட்டனர். ஆனால், நடிக்க ஆர்வம் காட்டும் பெண்கள் அனைவரையும் நாம் வேறுப்படக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.

அதிக அலங்காரம்

அதிக அலங்காரம்

அழகு என்பது அவரவரது சொந்த விஷயம். அதில் நாம் தலையிடுவது தவறு. ஓர் பெண் அதிகமாக அலங்காரம் செய்கிறாள் என்றால், அவள் ஆண்களை ஈர்க்க நினைக்கிறாள் என்று அர்த்தம் அல்ல, அவள் தன்னை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகிறாள், அவ்வளவு தான்.

சகஜமாக பேசுதல்

சகஜமாக பேசுதல்

அனைத்து பெண்களும் தன்னுடன் பேச வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு இருக்கின்றது. எடுத்த எடுப்பில் அந்த பெண் சகஜமாக பேச தொடங்கிவிட்டால்.., "டேய் மச்சான் அவ மேட்டரா.. இருப்பாளோ.." என்று புரளிகளை பரப்புவது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் பெண், அங்கு வேலை செய்யும் ஆண்களுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்றால், அவள் மேலதிகாரியுடன் தொடர்புடையவள் என்று பேசுவது. அப்படியானால், ஆண் ஒருவன் பதவி உயர்வு அடைவதற்கு கூட அதே மேலதிகாரியுடன் தான் தொடர்புக் கொண்டிருந்தாரா என்ன?

பைக்கில் செல்வது

பைக்கில் செல்வது

ஆணுடன் ஓர் பெண் பைக்கில் சென்று வர வேண்டும் என்றால் அவள் மனைவியாகவோ, காதலியாகவோ தான் இருக்க வேண்டுமா? தோழியாக இருக்கக் கூடாத என்ன? உங்கள் வீட்டு பெண்கள் உறவினருடன் எங்காவது வெளியில் சென்றால் அவர்களையும் இதே கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா?

சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது

சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது

தமிழ் தெரிந்தும் ஓர் பெண் சரளமாக ஆங்கிலம் பேசினால், அவள் வேலையிடத்தில் அந்த மொழியை நன்கு பேசி பழகிவிட்டால், அது அவளது பழக்கத்தில் ஓர் விஷயமாக ஆகிவிட்டது என்று ஏன் நாம் யாரும் எண்ணுவது இல்லை.?

அதிகமாக உணர்ச்சிவசப்படுவது

அதிகமாக உணர்ச்சிவசப்படுவது

அதிகமாக சிரிப்பது, ஆச்சரியம் அடைவது போன்று ஓர் பெண் இருந்தால், அவள் நடிக்கிறாள் என்று குறை கூறும் முன்பு, நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் போது ஆண்கள் உணர்ச்சிவசப்படுவதை விட, எந்த பெண்ணும் அதிகமாக தனது உணர்சிகளை வெளிக்காட்ட முடியாது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 புகை, மது

புகை, மது

கலாச்சார மாற்றத்தில், பல விஷயங்கள் மாறி வருகிறது. காலம், காலமாக ஆண்கள் சாராயத்தில் இருந்து, ஸ்காட்ச் வரை குடிப்பது தவறல்ல. ஆனால், பெண்கள் குடிப்பது தவறு. உண்மையில் இருவரும் குடிப்பதும், புகைப்பதும் தவறு தான்.

கருத்து

கருத்து

இங்கு நாம் கண்ட அனைத்து விஷயங்களிலும் நமது கண்ணோட்டம் தான் தவறாக இருக்கிறதே தவிர. அந்த செயல்களில் ஈடுப்படுபவர்களது மனது அல்ல. உண்மையில், நல்லவர், தீயவர் என்பது அவர்களது மனதின் செயல்பாடுகளில் தான் இருக்கிறதே தவிர, அவர் உடுத்தும் உடையிலும், பாவனைகளிலும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men Should Change Their Thought About Women

Do you know about the things men should change their thoughts about women? read here.
Story first published: Wednesday, June 10, 2015, 15:03 [IST]
Desktop Bottom Promotion