For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா?

By Ashok CR
|

ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வாகும்.

காதல் என்பது முழுமையான நம்பிக்கை மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதால் ஏற்படுவது. இந்த உணர்வு அந்த உறவின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மிகப்பெரிய சண்டை வந்தாலும் கூட, அது அந்த உறவை வலுப்படுத்தும். காரணம், கோடிக்கணக்கான மன்னிப்புகளோடு ஒருவரையொருவர் மன்றாடுவது தான்.

நண்பர்களே! 7 டைப் காதல் இருக்காம்... அதுல நீங்க எந்த வகை...?

மற்றொரு புறத்தில், காமம் என்பது இயற்கையின் வாயிலாக ஆணையும் பெண்ணையும் உடல் ரீதியாக ஒன்றிணைக்கச் செய்வதாகும். இந்த உணர்வு ஏற்படும் போது, படுக்கையைப் பற்றி மட்டுமே அவன் சிந்தனை செயல்பட தொடங்கும். காமம் என்றால் படுக்கையில் போர்வைக்கு அடியில் செல்வதை பற்றி மட்டுமே சிந்தனை இருப்பதால், ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அக்கறை குறைவாகவே இருக்கும்.

ஒரு உறவில் உள்ள காதலுக்கும் காமத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அது காதலா காமமா என்பதை கண்டுபிடிப்பதற்கு சில வழிகள் உள்ளது. இருப்பினும் காமம் இல்லாத போது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் முழுமை பெறுமா? என்ன சொல்கிறீர்கள்?

தவறான நபரை காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா? மேலும் படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோற்றத்தை மட்டும் ரசிப்பது

தோற்றத்தை மட்டும் ரசிப்பது

உங்கள் துணை உங்கள் தோற்றத்தின் மீது மட்டும் குறியாக இருந்து, உங்கள் உள்ளத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உறவு சுத்தமான காமத்தினால் ஆனவை.

உரையாடல்கள் இல்லாமல் இருத்தல்

உரையாடல்கள் இல்லாமல் இருத்தல்

எப்போதும் பார்த்தாலும் போர்வைக்கு அடியில் செல்வதன் மீதும் மட்டுமே நாட்டம் இருந்து, இரண்டு பேருக்கு மத்தியில் சரியான உரையாடலே இல்லையென்றால், கண்டிப்பாக உங்கள் உறவில் காமம் மட்டுமே உள்ளது.

உண்மையான உணர்வுகள்

உண்மையான உணர்வுகள்

நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் வெறுமனே பகல் கனவுடனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தால், உங்கள் உறவில் காமம் மட்டுமே உள்ளது.

நீங்கள் காதலில் உள்ளீர்களா?

நீங்கள் காதலில் உள்ளீர்களா?

உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா? நீங்கள் காதலில் இருக்கிறீர்களா அல்லது வெறும் உடல் இச்சைக்காக இருக்கிறீர்களா என்ற ஒரு கேள்வி எப்போதும் எழும்.

திருமணமாகாமல் ஒன்றாக வாழ்தல்

திருமணமாகாமல் ஒன்றாக வாழ்தல்

திருமணமாகாமல் நீங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தால், அந்த உறவில் காமமே பிரதான பங்கை வகிக்கும். நீங்கள் பகிர்ந்து கொள்வது செக்ஸை தவிர வேறு எதுவுமே இல்லையென்றால், உங்கள் உறவில் காதலுக்கு பதில் காமமே மேலோங்கி இருக்கிறது.

போதுமான நேரத்தை ஒதுக்குதல்

போதுமான நேரத்தை ஒதுக்குதல்

காமத்தை தவிர இருவரும் பிற விஷயங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதும், உங்கள் காதலை எடுத்துக்காட்டும் ஒரு வழியாக விளங்கும்.

ஒன்றாக செலவழித்த நேரம்

ஒன்றாக செலவழித்த நேரம்

நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது, நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தால், அது காதலே தவிர காமம் அல்ல.

சந்தோஷம் வேண்டும் என்ற எண்ணம்

சந்தோஷம் வேண்டும் என்ற எண்ணம்

ஒருவர் உணர்ச்சிகளை மற்றவர் உண்மையாக காது கொடுத்து கேட்க முனைந்து, அவரை சந்தோஷப்படுத்த விரும்பினால், உங்கள் உறவில் காதலே மேலோங்கி இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் உதவுதல்

ஒருவருக்கொருவர் உதவுதல்

உங்கள் திறன்களை அறிந்து உங்களை எப்படி சிறந்தவராக மாற்ற வேண்டும் என்பது உங்கள் துணை அறிந்திருந்தால், உங்களை காமமில்லாமல் காதலுடன் ஊக்கமளிப்பார். அப்படி நடக்கும் போது உங்கள் உறவில் காதல் உள்ளது என்பதை நீங்கள் உணரலாம்.

குடும்ப பிணைப்பு

குடும்ப பிணைப்பு

உங்கள் துணையுடன் தான் உங்கள் வருங்காலம் என்ற நினைப்பு ஏற்பட்டால், அது கண்டிப்பாக காதலே. அந்த உறவில் காமத்திற்கு குறைந்த பட்ச முக்கியத்துவமே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Love Or Lust In Your Relationship?

Is it love or lust the two of you share in a relationship? Here are some ways to find out if it is love or lust in your relationship. Take a look.
Desktop Bottom Promotion