For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான 10 காரணங்கள்!

By Ashok CR
|

உங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர் உங்களிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து, புரிந்து கொள்ள, இதோ, அதற்கான 10 காரணங்கள். கதைகளில் கதாநாயகனும் கதாநாயகியும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று படிப்பது வழக்கம். ஆனால் நிஜ வாழ்க்கையில் உங்களை கீழ்தரமாக நடத்தும் காதலனின் கரத்தை பிடித்தால், உங்கள் வாழ்க்கையில் காதல் என்பதையே அதற்கு பிறகு நீங்கள் மறந்து விடலாம்.

சில நேரங்களில் உறவுகள் என்பது அனைத்து தவறான இடங்களிலுமே வலியை ஏற்படுத்தும். அப்படியானால் நாம் கதைகளில் படித்ததெல்லாம் பொய்யா? ஒரு வேளை, உங்களை கீழ்தரமாக நடத்தும் ஒருவரை நீங்கள் காதலித்தால், அவர் உங்களுக்கானவர் கிடையாது. அப்படி இல்லையென்றால் அது உங்கள் இருவருக்குமிடையே நடந்துள்ள தவறான புரிதல் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

உங்காளு அல்வா கொடுக்கப் போறார்ங்கிறதை தெரிஞ்சுக்க ஆசையா?.. காதைக் கிட்ட கொண்டு வாங்க...!

இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக கழிக்கலாம். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்துடன் தொடங்கும் போது அந்த உறவுக்கான புரிதல் உங்களுக்கு கிடைக்கும். உங்களை மதிக்காத, கடுமையாகவும் கீழ்தரமாகவும் நடந்து கொள்ளும் காதலனை கையாளுகிறீர்களா? அப்படியானால் இந்த பிரச்சனைக்கான 10 அறிகுறிகளை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் காதலன் உங்களை கீழ்தரமாக நடத்துவதற்கான காரணங்களைப் பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்கறை கிடையாது

அக்கறை கிடையாது

இந்த உறவை உண்மையாக அவர் தொடர நினைக்கிறாரா? அதை அவரே சொல்லாத வரை, உங்களாலும் சொல்ல முடியாது. ஒரு வேளை உங்களை பற்றியும் உங்கள் உறவை பற்றியும் கவலை கொள்ளாத கோபக்காரராக இருக்கலாம்.

உங்களிடம் விளையாடுகிறார்

உங்களிடம் விளையாடுகிறார்

உங்கள் காதலன், யூகிக்க முடியாதபடி நடந்து, உங்கள் உணர்வுகளுடன் விளையாடும் கெட்ட எண்ணம் படைத்தவராக இருக்கலாம். அவர் எந்தளவுக்கு உங்களை ஒதுக்கி விளையாடுகிறாரோ, அந்தளவுக்கு நீங்கள் குழம்பி அவரிடம் பைத்தியமாக இருப்பீர்கள் என்பது அவருக்கு தெரியும்.

போதிய உரையாடலின்மை

போதிய உரையாடலின்மை

அவர் உங்களை கீழ்தரமாக நடத்துகிறார் என்று நினைத்தால், உங்களின் எண்ணங்களை என்றாவது அவரிடம் வெளிப்படுத்தி உள்ளீர்களா? அப்படி பேசாத பட்சத்தில் நீங்கள் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரக் கூட மாட்டார். அதனால் உங்கள் உணர்வை அவரிடம் தெரிவிப்பது அவசியம்.

பழக்க அடிமைத்தனம்

பழக்க அடிமைத்தனம்

தன் வாழ்க்கையின் கடிவாளத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவரா உங்கள் காதலன்? அப்படியானால் ஏதாவது பழக்கத்துக்கு அவர் அடிமையானவராக இருக்கலாம். அதன் தாக்கத்தை உங்களிடம் பிரதிபலிக்கிறார். அது ஒரு வீடியோ கேமின் மீது இருக்கலாம் அல்லது சில தீய பழக்கங்களாகவும் இருக்கலாம்.

நல்ல நடத்தையை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்

நல்ல நடத்தையை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்

பல பேர் வீட்டில் தங்களின் தந்தை எப்படி நடக்கிறாரோ அதையே தான் அவர்களும் பின்பற்றுவார்கள். அவர் செய்வதை அப்படியே அவர்களும் செய்வார்கள். உங்கள் காதலனின் தந்தையும் கூட பெண்களை கீழ்தரமாக நடத்துபவராக இருக்கலாம் அல்லது அவனின் தாய் அவனுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவன் தந்தையை பின்பற்றி நடந்து, தான் சிறந்து செயல்படுபவனாக அவனுக்கு தவறான எண்ணம் இருக்கலாம்.

அவன் உங்களை பயன்படுத்துகிறான்

அவன் உங்களை பயன்படுத்துகிறான்

எரிச்சலுடன் கலந்த சோகம் இது. நீங்கள் விரும்பும் ஆண் உங்களிடம் இருந்து எதையாவது பெறுவதற்காகவே உங்களை பயன்படுத்தலாம். உங்களை ஒரு கைபொன்னாக பயன்படுத்த எண்ணலாம் அல்லது வெறும் காம இச்சைக்காக பயன்படுத்த எண்ணலாம்.

உங்கள் மீது அலுப்பு தட்டியிருக்கும்

உங்கள் மீது அலுப்பு தட்டியிருக்கும்

உங்கள் மீதோ உங்கள் காதலின் மீதோ உங்கள் காதலனுக்கு அலுப்புத் தட்டியிருக்கலாம். அப்படியானால் அவரை சந்தோஷப்படுத்த நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் உங்கள் மீது அவருக்கு இன்னமும் காதல் இருந்தால் தான் அவரை மீண்டும் உங்கள் வசம் ஈர்க்க முடியும். அவர் உங்களை விட்டு விலக முற்படும் போது அவரை சந்தோஷப்படுத்தும் எண்ணம் வருமா என்ன?

அவருக்கு நீங்கள் முக்கியம் அல்ல

அவருக்கு நீங்கள் முக்கியம் அல்ல

உங்கள் வாழ்க்கையில் அவர் மிகவும் முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமில்லாதவராக ஒரு ஊறுகாயை போல் இருக்கலாம். காதலின் மீது உங்கள் இருவரின் எதிர்பார்ப்பும் ஒத்துப் போகவில்லை என்றால், சிறப்பான உறவை தொடர்வது கடினமே.

அவர் அன்பில் சார்ந்து உள்ளவராக உங்களை நினைக்கலாம்

அவர் அன்பில் சார்ந்து உள்ளவராக உங்களை நினைக்கலாம்

சில நேரங்களில் உங்கள் காதலன் தனக்கென சொந்த நேரத்தை எதிர்ப்பார்பார். நீங்கள் எப்போதும் அவருடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கலாம். கொஞ்ச நேரமாவது தனிமை வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் அவர் அன்பில் சார்ந்து உள்ளவராக இருந்தால், அவரை காதலிப்பதில் புண்ணியம் இல்லை. உண்மையான காதலை அவர் மீது வைத்துள்ளதால் உங்களை கீழ்தரமாக நடத்துபவரை ஏன் காதலிக்க வேண்டும்?

அவர் மனதில் வேறு ஒரு பெண்

அவர் மனதில் வேறு ஒரு பெண்

நீங்கள் விரும்பும் உங்கள் காதலன் உங்களை விரும்பிய போதும், அவர் மனதில் வேறு ஒரு பெண் இருந்தாலும் இப்படி நடக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Reasons Why Your Boyfriend’s So Mean!

If you’re dealing with a boyfriend who ignores you, is rude, or just plain mean, use these 10 signs to get to the bottom of his mean issues.
Desktop Bottom Promotion