For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான உறவு போர் அடிப்பதற்கான காரணங்கள்!!!

By Maha
|

ஒரு உறவு தோன்றுவது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த உறவு பிரிவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக காதலிக்கும் போது ஆரம்பத்தில் இருவரது வாழ்க்கையும் மிகவும் சந்தோஷமாக செல்லும். ஏனெனில் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில், வாழ்க்கையே சொல்ல முடியாத அளவில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, அந்த உறவு சிலருக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும்.

இதனால் பல காதலர்கள் பிரிந்துவிடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கக்கூடியவை தான். ஆனால் அதற்கு மனம் தான் வேண்டும். மனம் இருந்தால், மார்க்கம் உண்டு என்னும் பழமொழிக்கேற்ப, உறவுகள் அலுத்துப் போகாமல் இருக்க வேண்டுமெனில், அந்த உறவை வித்தியாசமான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை.

முதலில் உறவுகளில் போர் அடிப்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின், அதனை எப்படி சரிசெய்வது என்று யோசித்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேச்சுவார்த்தையின்மை

பேச்சுவார்த்தையின்மை

தற்போது வேலைக்கு அனைவரும் செல்வதால், காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது கடினமாகிவிட்டது. இதனால் இருவருக்கிடையே போதிய பேச்சுவார்த்தை இல்லாமல், அந்த உறவானது போர் அடிக்க ஆரம்பிக்கிறது.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

காதல் செய்யும் ஆரம்ப காலத்தில், காதலி/காதலனை எங்கேனும் அழைத்துச் சென்று, நேரத்தை செலவிடுவோம். அதிலும் பூங்கா, ரெசார்ட், பீச் என்றெல்லாம் செல்வோம். ஆனால் நாட்கள் போக போக, ஒருவித சோம்பேறித்தனத்தால் எங்கும் செல்லாமல், அவர்களை பார்க்காமல், எந்நேரமும் நண்பர்களுடன் இருப்பது போன்றவற்றால் உறவுகள் போர் அடிக்கிறது.

ரொமான்ஸ் இல்லாதது

ரொமான்ஸ் இல்லாதது

திருமணம்/காதல் உறவில் ரொமான்ஸ் இருந்தால் தான், வாழ்க்கை செழிப்பாக இருக்கும். அதுவே இல்லாமல் போனால், வாழும் ஆசை குறைந்துவிடும்.

ஒரேமாதிரியான செயல்

ஒரேமாதிரியான செயல்

உறவுகளில் போர் அடிக்க மற்றொரு காரணம் தான், தினமும் ஒரே மாதிரியான செயலில் ஈடுபடுவது. உதாரணமாக, காலையில் அலுவலகத்திற்கு அழைத்து செல்வது, மாலையில் அவர்களை மீண்டும் வீட்டில் ட்ராப் செய்வது. இப்படியே சென்றால் போர் அடிக்காமல் பின் எப்படி இருக்கும். ஆகவே அவ்வப்போது வெளியே சினிமா, ஹோட்டல் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

சண்டை

சண்டை

எதற்கெடுத்தாலும் சண்டை போட்டாலும், உறவுகள் போர் அடித்து, நாளடைவில் பிரிவிற்கு வழிவகுத்துவிடும்.

பிரச்சனைகளை மனதிலேயே புதைப்பது

பிரச்சனைகளை மனதிலேயே புதைப்பது

துணையுடன் பிரச்சனைகளை பகிராமல், மனதில் வைத்துக் கொண்டு இருந்தால், மன அழுத்தம் அதிகரித்து, உறவானது போர் அடித்துவிடும். எப்படியெனில், துணையுடன் பகிராமல் இருப்பதால், அலுவலகத்தில் யாரேனும் நல்லவிதமாக பேச ஆரம்பித்தால், அவர்களுடன் அனைத்தையும் பகிர வேண்டிய நிலை ஏற்படும். இதனால் துணையின் மீது வெறுப்பு அதிகரித்து, பிரிவு ஏற்படும்.

பரிசுகள் இல்லாதது

பரிசுகள் இல்லாதது

காதல் செய்யும் போது ஆரம்பத்தில், காதலி/காதலனை ஈர்க்கும் வகையில் பரிசுகள் வழங்கிவிட்டு, நாட்கள் செல்ல செல்ல அதனை தவிர்த்தால், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, சலிப்பு தட்டிவிடும்.

அதிகப்படியான எதிர்பார்ப்பு

அதிகப்படியான எதிர்பார்ப்பு

இதுவரை நம் மனதில் தோன்றும் எதையும் எதிர்பாராத வகையில் செய்துவிட்டு, எதிர்பார்க்கும் போது, அதைப் புரிந்து கொண்டு செய்யாமல் இருந்தால், மனதில் ஒருவித சங்கடம் ஏற்பட்டுவிடும்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

எந்த ஒரு விஷயத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம் செய்தால், பேச பிடிக்காமல் போய், இருவருக்கும் வாழ்க்கையே வெறுத்துவிடும்.

போதிய நேரம் செலவிடாமல் இருப்பது

போதிய நேரம் செலவிடாமல் இருப்பது

முன்பெல்லாம், நேரம் பார்க்காமல் அவர்களுடன் வெளியே சென்று, பெரும்பாலான நேரத்தை அவர்களுடன் செலவழித்துவிட்டு, நாட்கள் கடந்து செல்ல அது குறைந்தால், உறவுகளில் சலிப்பு ஏற்படும்.

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவை இல்லாதது

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவை இல்லாதது

காதலின் ஆரம்ப காலத்தில் எதற்கெடுத்தாலும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதாகத் தான் இருக்கும். ஆனால் நாளடைவில் சுத்தமாக இல்லாமல் போனால், அது மற்றவர்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தி, பின் உறவில் அலுப்பை ஏற்படுத்திவிடும்.

எரிச்சலூட்டுவது

எரிச்சலூட்டுவது

யாரேனும் தவறு செய்து விட்டால், அதனை மன்னித்து விடாமல், அதனைப் பற்றி பேசி எரிச்சலூட்டுவது.

சொல்வதை ஆர்வமின்றி கேட்பது

சொல்வதை ஆர்வமின்றி கேட்பது

வாழ்க்கைத்துணை எதையேனும் ஆர்வமுடன் சொல்ல வந்தால், அதனை அவர்களுக்கு ஆறுதலாக இருந்து கேட்காமல், ஆர்வமில்லாதவாறு கேட்டால், கோபத்தை ஏற்படுத்துவதோடு, கிண்டல் செய்வது போலாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Relationships Become Boring?

Here are some of the reasons why relationship becomes boring, while you have to look at ways to bring the zing back, make sure you keep an eye out for the warning signs early on.
Story first published: Thursday, September 26, 2013, 15:53 [IST]
Desktop Bottom Promotion