For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த சில வழிகள்!!!

By Super
|

மாதா, பிதா, குரு, தெய்வம்! என்று நாம் படித்திருக்கிறோம். இது எவ்வளவு உண்மை என்பதை நாம் அன்றாட வாழ்க்கையிலேயே தெரிந்து கொள்கிறோம். தாய் தான் இந்த உலகத்தின் முதல் தெய்வம். அதனால் தான் 'தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை' என்று கூறியுள்ளனர். தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை தாயானவள் தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறாள்.

ஒரு தாய் தன் பிள்ளைகளையும், கணவனையும் எப்போதுமே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாலும், அவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுப்பதில்லை. நம் தாய் தானே என்ற உரிமை இருப்பதால், அவர்களின் மீது பெரிதாக நாம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதில்லை. ஆகவே சிறிது நேரம் எடுத்து கொண்டு தாயை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள். அவர்கள் செய்வதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நன்றி பாராட்ட மறக்காதீர்கள். இத்தகைய அன்னையை மகிழ்விக்கவும் , ஆச்சரியப்படுத்தவும் சில வழிகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரகசியமான பரிசு

ரகசியமான பரிசு

தாய் காலை எழுவதற்கு முன், விடியற்காலையே எழுந்து தாய்க்கு அருகில் ஒரு சின்ன பரிசை வைக்கலாம். இதனால் அவர் எழுந்து பார்க்கும் போது, அது அவருக்கு ஆச்சரியமான சந்தோஷத்தை கொடுக்கும். அது ஒரு சின்ன கவரிங் மோதிரம் அல்லது ஒரு சின்ன கப் கேக் அல்லது ஒரு புகைப்பட ஃப்ரேம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை வெளிக்காட்டுவது மட்டும் முக்கியமே தவி,ர விலை ஒரு பொருட்டு இல்லை.

ஒரு பாட்டு அல்லது கவிதை

ஒரு பாட்டு அல்லது கவிதை

தாயின் மேல் வைத்திருக்கும் அன்பை சிறு வார்த்தைகளாக எழுத பெரிய கவிஞராகவோ, புலவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப நிகழ்ச்சியில் அல்லது வீட்டில் குடும்பத்தாருடன் உணவருந்தும் போது, திடீரென்று எழுதிய கவிதையை அவர் முன் உரக்கப் படித்து காட்டி, அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டலாம். உரக்க படிக்க கூச்சமாக இருந்தால், எழுத்து வடிவில் அவர்களுக்கு கொடுக்கலாம்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நண்பர்களின் பட்டியலில் தாயை சேர்க்கவில்லை என்றால் வாழ்க்கையில் இருந்து அவரை பிரித்து பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றலாம். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது, உங்கள் ஜட்டியை மாற்ற உங்கள் தாய் யோசித்தாரா? அல்லது பல பேர் முன்னிலையில் குழந்தை பருவத்தில் அவரை அடிக்கும் போது அதற்காக அவர் சங்கடப்பட்டாரா? யோசித்துப் பாருங்கள். அதனால் ஃபேஸ்புக் மூலம் அவருடன் உரையாடி, அவருக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

சமையல்

சமையல்

தினமும் முகம் சுழிக்காமல் சமைப்பவர் தான் அன்னை. அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மாலை வேளையில் ஓய்வு கொடுத்து ,அவருக்காக நல்ல ருசியான உணவை சமைத்து கொடுத்தால், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

சுற்றுலா

சுற்றுலா

வார இறுதியில் ஒரு சின்ன சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து சென்றால், அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்து, தினசரி பார்க்கும் வேலையில் இருந்து ஒரு மாறுதல் கிடைக்கும். உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொண்டு உரையாடிக் கொண்டே சுற்றுலாவை கொண்டாடுங்கள். மேலும் காரில் இசையை ஒலிக்கச் செய்து, அவரை ஒரு இளவட்டம் போல் மாற்றுங்கள்.

திரைப்படம்

திரைப்படம்

பள்ளி பருவத்திலும், வாலிப வயதிலும் கண்டு களித்த படங்களை திரும்பி அவருடன் சேர்ந்து பார்த்தோமானால், அவருடைய பழைய நினைவுகள் திரும்பி மகிழ்ச்சி அடைவார் இல்லையா? அந்த நினைவுகளுக்கு அவரை எடுத்துச் செல்ல, அவர்களுக்கு பிடித்த படங்களை வாங்கி பாருங்கள். அவருடன் சேர்ந்து படங்களை பார்த்தால், அவர் மீது இருக்கும் அக்கறையை எடுத்துச் சொல்லும்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

பரிசளிப்பது ஒரு இன்பம் என்றால் அவரை கடைக்கு அழைத்து சென்று அவருடன் பொழுதை கழிப்பது இன்னொரு வகையான இன்பம். அதிலும் தாயை குழந்தை போல் பாவித்து, எது பிடிக்கும் பிடிக்காதென்று கேட்டு கடை வீதியில் சுற்றுங்கள். இந்த நாள் கண்டிப்பாக விலை மதிப்பில்லா நாளாக அமைவது உறுதி. மேலும் இது அன்பை வெளிக்காட்டும் வழியாகவும் அமையும்.

குளியல் அறை

குளியல் அறை

எந்த தாய்க்கு தான் குளியலறை அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்களை மணக்க செய்தால் பிடிக்காமல் போகும். எனவே தாயின் ரசனைக்கேற்ப அவருடைய குளியலறையை அலங்காரம் செய்யுங்கள். குளிக்கும் டப்பில் நுரை நிறைந்த தண்ணீரை நிரப்பி அமைதியான பாட்டை இசைக்க செய்யுங்கள்.

பெடிக்யூர்

பெடிக்யூர்

வீட்டிலேயே பெடிக்யூர் (கால்களுக்கான மசாஜ்) மற்றும் தலை மசாஜ் போன்றவற்றை செய்துவிட்டால், அவருடன் அலுப்புத் தட்டாமல் நேரத்தை செலவழிக்கும் ஒரு வழியாக இது அமையும். தாயை அழகு நிலையங்களுக்கு செல்லவிடாமல், நீங்களே இந்த பணியை செய்யவும். அவரின் நகத்திற்கு நெயில் பாலிஷ் பூசுங்கள், பாதத்தில் அழுக்கெடுங்கள் அல்லது தலை மசாஜ் செய்யுங்கள். இது அவருடைய மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

செல்லப்பிராணி

செல்லப்பிராணி

இன்றைய வாழ்க்கை முறையில் விட்டில் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் அன்னை தனிமையில் வாடுவது உறுதி. எனவே தாய்க்கு துணையாக பூனை குட்டி, நாய் குட்டி அல்லது பறவைகளை பரிசளியுங்கள். இது அவரின் தனிமையை போக்கும் விதமாக எடுத்துக் கொள்வதோடு, அவர்கள் மீது அக்கறை காட்டும் விதமாகவும் இருக்கும். குறிப்பாக தாய்க்கு செல்லப் பிராணிகளை பிடித்தால் மட்டுமே, இந்த வழியை கையாள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways to Show Your Mom You Love Her

Mothers tend to be taken for granted on a daily basis because they constantly care and nurture their kids and husbands. Take some time out and explicitly show your mom that you really love her and thank her for everything that she has done for you.
Desktop Bottom Promotion