For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலனை நல்ல கணவராக மாற்ற சில சூப்பர் டிப்ஸ்...

By Maha
|

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்துவிட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும் போது பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே திருமணத்திற்கு பின் கணவர்களாக நடத்துவதற்கு பதிலாக, காதலிக்கும் போதோ அல்லது நிச்சயதார்தத்திற்கு பின்னரோ பொறுப்புள்ள கணவராக பயிற்சிக்க வேண்டும்.

பொதுவாக ஆண்களுக்கு பொறுப்புணர்வு பெண்களை விட குறைவு தான். மேலும் சில ஆண்களுக்கு காதலி கிடைத்துவிட்டால், ஒருவித அலட்சியம் வந்துவிடும். பின் வாழ்க்கையில் ஒருநிலைக்கு வந்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமானது குறைந்துவிடும். ஆனால் உண்மையில் காதல் வந்த பின் தான் ஆண்கள் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, பொறுப்பின்றி நடந்தால், நல்ல விதமாக சென்ற காதலும், பிரிவில் முடியும். எனவே அவ்வாறு பொறுப்பில்லாமல் சுற்றும் காதலனை, ஆரம்பத்திலேயே கணவருக்கான பொறுப்புகளுடன் பயிற்சித்தால், ஒரு நல்ல கணவனாக எப்போதும் இருப்பார்கள்.

ஆகவே இப்போது எப்படி காதலனை ஒரு நல்ல கணவனாக பயிற்சிப்பது என்று சில வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவர்களின் மனதை புண்படுத்தாமல், அவர்களுக்கு தெரியாமலேயே கணவர்கள் எப்படி நடப்பார்களோ அப்படி மாற்றி பழக்கப்படுத்திவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பில் கட்டுவது

பில் கட்டுவது

திருமணத்திற்கு பின், உங்களின் ஏடிஎம் உங்கள் கணவர் தான். அவர் தான் அப்போது எந்த ஒரு செலவையும் செய்வார்கள். எனவே காதலிக்கும் போதே, அத்தகைய செலவை செய்ய வையுங்கள்.

துணையாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது

துணையாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது

மருத்துவரிடம் செல்லும் போது, அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் தற்போது பெரும்பாலான ஆண்கள் அதிக வேலை காரணமாக திருமணத்திற்கு பின் சரியாக கண்டுகொள்வதில்லை. மேலும் திருமணத்திற்கு பின், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதும் அவரது கடமையே.

சமையல் செய்ய சொல்லுவது

சமையல் செய்ய சொல்லுவது

திருமணத்திற்கு பின் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்யப் போவதில்லை. கணவன், மனைவி இருவரும் தான் செய்ய வேண்டும். எனவே சமையல் செய்யப் பழகுமாறு சொல்ல வேண்டும்.

பிடித்ததை சமைக்க வைத்தல்

பிடித்ததை சமைக்க வைத்தல்

பொதுவாக ஆண்கள் பெண்களை விட சூப்பராக சமைப்பார்கள். எனவே உங்களுக்கு பிடித்த சமையல் எது என்று சொல்லி, அதை எப்படி செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொடுத்து, பழக்க வேண்டும்.

வேலைக்கு அழைத்து செல்லுதல்

வேலைக்கு அழைத்து செல்லுதல்

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்தால், கணவன் தவறாமல் மனைவியை காலையில் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது மற்றும் மாலையில் தவறாமல் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இத்தகைய பழக்கத்தை காதலிக்கும் போதே, ஆரம்பித்தால், அப்போது திருமணத்திற்கு பின் இநத் விஷயத்தில் சண்டை வராமல் இருக்கும்.

பெற்றோர்களை சந்தித்தல்

பெற்றோர்களை சந்தித்தல்

காதலிக்கும் போது அடிக்கடி உங்களது பெற்றோரை சந்தித்து பேசுமாறு செய்யவும். அதுவும் இரவு நேர விருந்து செய்து, அழைத்து பேசினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வைத்தால், திருமணத்திற்கு பின் உங்களது பெற்றோரை சந்திப்பதில் மறுப்பு ஏதும் கூறமாட்டார்கள்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

காதல் செய்த பின்னர், காதலனுடன் ஷாப்பிங் செல்ல ஆரம்பிக்க வேண்டும். இதனால் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று ஷாப்பிங் பில்லை அவர்கள் கட்டுவார்கள் மற்றொன்று நீங்கள் ஷாப்பிங் எப்படி செய்வீர்கள் என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருப்பார்கள்.

செலவை பகிர்ந்து கொள்ளுதல்

செலவை பகிர்ந்து கொள்ளுதல்

காதலிக்கும் போதே கணக்குவழக்கு பார்க்க வேண்டும். உதாரணமாக, வாடகை கொடுப்பது, சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்குவது போன்றவற்றை இருவரும் ஆலோசிக்க வேண்டும். மேலும் இருவரும், இருவரது வங்கி நிலவரத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வீடு பார்த்தல்

வீடு பார்த்தல்

எந்த மாதிரியான வீடு உங்களுக்குப் பிடிக்கும் என்று ஆரம்பதிலேயே சொன்னால், திருமணத்திற்கு பின் இருவரும் அந்த மாதரியான வீட்டிற்கு சந்தோஷமாக குடிபுகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Train Your Boyfriend To Become Husband | காதலனை நல்ல கணவராக மாற்ற சில சூப்பர் டிப்ஸ்...

The transformation from becoming a husband from boyfriend is never a smooth one. Men are immature and find it difficult to accept new responsibilities. So, you must train your boyfriend properly to take up the responsibilities of being a married man. Here are some ways to train your boyfriend to become your husband without hurting his ego.
Story first published: Thursday, April 4, 2013, 17:47 [IST]
Desktop Bottom Promotion