For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ அளிக்கும் 6 முக்கிய நன்மைகள்!!!

By Ashok CR
|

உலகிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க மருத்துவ குணம் நிறைந்த பொருள் குங்குமப்பூ. இது அழகிய சருமத்தை பெறுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றது. இதில் மருத்துவ குணங்கள் காணப்படுவதற்கு காரணம் இதில் உள்ள தையமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகும்.

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் பிறக்க போகும் குழந்தை அழகாகவும், நிறமாகவும் பிறக்கும் என்று நம்பப்படுகின்றது. அனால் எந்த ஒரு ஆராய்ச்சியும் இதுவரை இதனை நிரூபிக்கவில்லை. குழந்தையின் நிறமானது அதன் பெற்றோர்களின் ஜீனை பொறுத்து மட்டுமே அமையும்.

இது குழந்தைக்கு நிறத்தை கொடுக்காவிட்டாலும் பல பயன் தரக்கூடிய பண்புகளை உள்ளடக்கியுள்ளது. இது நமக்கு அளிக்கும் ஆறு முக்கிய பயன்கள் தேர்ந்தெடுத்து உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் பார்வை பிரச்சனைகள்

கண் பார்வை பிரச்சனைகள்

குங்குமப்பூ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்ளப்படும் குங்குமப்பூ, கண் புரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

செரிமானம்

செரிமானம்

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தினை உடலின் அணைத்து பாகங்களுக்கும் சீராக எடுத்து செல்ல இது உதவுவதால், செரிமானமும் பசியும் மேம்படும். மேலும் இது இரைப்பை குடலில் ஒரு சவ்வு போல் ஏற்படுத்தி அசிடிட்டியில் இருந்து பாதுகாக்கின்றது.

ஈரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்

ஈரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்

நல்ல மணத்தை கொண்ட குங்குமப்பூ உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் இது ரத்தத்தை சுத்தபடுத்தவும் பயன்படுகின்றது. இது ஈரல், சிறுநீரகம் மற்றும் நீர்ப்பை பிரச்சனைகளுக்கு மிகவும் பயன்தர கூடியதாகும்.

வயிற்றுவலி

வயிற்றுவலி

கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை சுரக்க வைக்கவும், வயிற்றுவலி பிரச்சனைகளிலிருந்து தீர்வு அளிக்கவும் இது உதவுகிறது. இதில் இருக்கும் வலி குறைப்பு தன்மையானது வயிற்று வலியை குறைப்பதற்கு பயன்படுகின்றது

குழந்தையின் அசைவு

குழந்தையின் அசைவு

கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பின் குழந்தையின் அசைவுகளை உணர முடியும். குங்குமப்பூவை 5 மாதங்களுக்கு பின், பால் அல்லது உணவுடன் எடுத்து கொள்ளும் போது எளிதாக குழந்தையின் அசைவை உணர முடியும். இது உடல் சூட்டினை அதிகரிக்கும் தன்மையை கொண்டதால், அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இரத்த கொதிப்பு

இரத்த கொதிப்பு

பெண்களின் ரத்த கொதிப்பு மற்றும் மனநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 3 முதல் 4 சிட்டிகை குங்குமப்பூ எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையை கொண்ட இது தசை தளர்வடைய உதவும். அதிக அளவில் பயன்படுத்தும் போது கருப்பை ஊக்கியாகவும் செயல்படுகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Six Health Benefits Of Saffron For Pregnant Women

Saffron may not improve the fairness of baby but has many beneficial properties. Here we listed top six health benefits of saffron for pregnant women.
Desktop Bottom Promotion