Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிகள் போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்களானது தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது லேசாக எதையேனும் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது.
அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் வீட்டிலேயே இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியோர் அவ்வப்போது எதையேனும் சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால் உடலில் சத்துக்களானது நன்றாக இருக்கும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழக்கூடும். குறிப்பாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால், அவர்கள் போதிய இடைவெளியில் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உடல் விரைவில் சோர்வடைவதோடு, குழந்தைக்கு கிடைக்க வேண்டிய போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
எனவே அத்தகைய வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளின் உடலில் சத்துக்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு, அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மேற்கொண்டாலே போதுமானது. இப்போது கர்ப்பமாக இருக்கும் போது வெளியே சென்றால், எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.

பழங்கள்
கர்ப்பத்தின் போது பழங்கள் தான் சிறந்த நண்பன். எனவே எப்போது வெளியே அல்லது அலுவலகத்திற்கு செல்வதாக இருந்தாலும், 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள். எனவே இத்தகைய பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் கொண்டு செல்லாமல், அதனை அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது.

சிட்ரஸ் பழங்களை நறுக்க வேண்டாம்
பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது. அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே வெட்டக்கூடாது. இவை அனைத்தையும் நறுக்கிய உடனே சாப்பிட வேண்டும்.

ஜூஸ்
எந்த ஒரு பழத்தையும் எடுத்து செல்ல முடியாவிட்டால், ஜூஸாக செய்து சாப்பிடலாம். இதனால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம்.

தண்ணீர்
அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர் வறட்சியை தவிர்க்கலாம்.

உலர் பழங்கள்
கர்ப்பிணிகளுக்கு உலர் பழங்கள் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் இவை எளிதில் எடுத்துச் செல்ல கூடியதாக இருக்கும். குறிப்பாக வேலை அதிகமாக இருக்கும் போது, இதனை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட வசதியாக இருக்கும்.

பிஸ்கட்
கர்ப்பிணிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்து, அவ்வப்போது ஒவ்வொன்றாக சாப்பிடுவது நல்லது.

மில்க் ஷேக்
கடைகளுக்கு செல்லும் போது ஏதேனும் வாங்கி சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது மில்க் ஷேக் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் மில்க் ஷேக்கில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் இருப்பதால், அவை கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆரோக்கியமான பானமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications