For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

By Maha
|

அலர்ஜி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் பூச்சிகள், தோட்டத்தில் இருக்கும் மகரந்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, குறிப்பிட்ட உணவுகள், நட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடல் மற்றும் மன ரீதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதோடு, உடல் வலி ஏற்படுவதும் சாதாரணம் தான். ஆனால் இவை அனைத்துடன் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படும்.

இத்தகைய அலர்ஜி ஏற்படுவதற்கு கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் மற்றும் இரத்தத்தின் அடர்த்தி அதிகமாவது தான். எனவே இதற்கு மருத்துவரின் பரிந்துரையின் படி மருந்துகளை உட்கொண்டாலும், ஒருசில செயல்களை பின்பற்றினால், அலர்ஜி வருவதை தடுக்கலாம். ஏனெனில் கர்ப்பத்தின் போது அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டாலும், கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் மருத்துகள் உட்கொள்வதை நிறுத்திவிட்டு, அலர்ஜி வருவதை தடுக்கும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது கர்ப்பத்தின் போது அலர்ஜி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதவுகளை மூடவும்

கதவுகளை மூடவும்

அலர்ஜியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் காற்றின் வழியே வரலாம். எனவே அலர்ஜி ஏற்படும் என்று தெரியும் கர்ப்பிணிகள் வீட்டின் கதவுகளை மூடிக் கொள்வதோடு, அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டும்.

திரைச்சீலை மற்றும் பெட்ஷீட்

திரைச்சீலை மற்றும் பெட்ஷீட்

வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட் மற்றும் திரைச்சீலைகளை சுடுநீரில் துவைக்க வேண்டும். இதனால் அலர்ஜி ஏற்படுவதை அறவே தவிர்க்கலாம்.

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால், அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவைகளின் முடி கூட அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் எப்போதும் செல்லப் பிராணிகளை தினமும் குளிப்பாட்டி, அதன் முடியை சீவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கார்பெட் மற்றும் மேட்

கார்பெட் மற்றும் மேட்

கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை கார்பெட் மற்றும் மேட் கொண்டு அலங்கரிக்காமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் அவைகளின் கண்ணுக்கு தெரியாத அலர்ஜி உண்டாக்கும் பூச்சிகள் தங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் தினமும் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆவிப்பிடித்தல்

ஆவிப்பிடித்தல்

கர்ப்பிணிகள் ஆவிப்பிடித்தால், முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி, முகம் புத்துணர்ச்சி அடைவதோடு, சைனஸால் ஏற்படும் எரிச்சலை தடுக்கலாம்.

முகத்தை கழுவுதல்

முகத்தை கழுவுதல்

முகத்தை வெதுவெதுப்பான நீரில் அவ்வப்போது கழுவினால், தூசிகளால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க முடியும்.

சூடான துணி

சூடான துணி

சுத்தமான துணியை, சூடான நீரில் நனைத்து பிழிந்து, சைனஸ் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

புதினா டீ

புதினா டீ

இந்த புதினா டீயை கர்ப்பிணிகள் குடித்தால், தூசியினால் ஏற்படும் தும்மலை தடுத்து, சுவாச கோளாறை குணப்படுத்தலாம்.

முக்கியமான குறிப்பு

முக்கியமான குறிப்பு

தூசிகளால் அலர்ஜி ஏற்படும் கர்ப்பிணிகள், வெளியே செல்லும் போது தவறாமல் முகத்தை மூடிக் கொண்டு செல்வது இன்றியமையாதது. மேலும் செல்லப்பிராணிகள் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Prevent Allergy During Pregnancy

Allergies are no exception during pregnancy. It leads to nasal congestion, a very common allergy symptom during pregnancy due the increase in hormones and blood volume. However, during pregnancy you should opt for natural ways to treat allergies. They are safe, natural and doesn't have any side effect. Medications with medicines can be harmful for the baby so, it is best to opt for natural ways.
Story first published: Monday, June 17, 2013, 16:10 [IST]
Desktop Bottom Promotion