For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்...

By Super
|

குழந்தைக்கு அடிக்கடி கவனச் சிதறல்கள் ஏற்படுகின்றனவா, சாரதாரண விஷயங்களை கூட வெகு சுலபமாக மறக்கின்றார்களா? அப்படியென்றால் குழந்தை ஞாபக மறதியினால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று அர்த்தம். பொதுவாக மூளை நன்கு செயல்பட போதுமான ஆற்றல் தேவைப்படுகிறது.

இத்தகைய ஆற்றலானது நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமும், வழக்கமான உடல்ரீதியான செயல்பாடுகள் செய்வதன் மூலமும் வழங்க முடியும். இப்போது குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூடுதல் ஆற்றல் தேவைப்படும் காலம்

கூடுதல் ஆற்றல் தேவைப்படும் காலம்

குழந்தைக்கு கடுமையான மன சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளான பாடத் திட்ட தேர்வுகள் மற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்த ஏற்பாடுகளை செய்யும் போது, குழந்தைக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும்.

வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்

வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழக்கமாக உட்கொள்ளும் ஆரோக்கியமான உணவுடன் துத்தநாகம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் ஈ போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் அடங்கிய ஒருசில முக்கிய உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

<a href=ஒமேகா-3 உணவுகள் அவசியம்" title="ஒமேகா-3 உணவுகள் அவசியம்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

ஒமேகா-3 உணவுகள் அவசியம்

ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ், நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.

உடற்பயிற்சி மற்றும் தூக்கம் இன்றியமையாதது

உடற்பயிற்சி மற்றும் தூக்கம் இன்றியமையாதது

ஊட்டச்சத்துக்களை தவிர, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் உடலுக்கு தேவைப்படுகிறது. ஏனெனில் உடற்பயிற்சி மூளைக்கு புதிய ஆக்சிஜனைப் பெற தூண்டுகிறது மற்றும் தூக்கம், மூளை அமைதியாக இருக்கவும், தளர்வற்று செயல்படவும் உதவுகிறது.

செஸ் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தவும்

செஸ் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தவும்

சதுரங்கம் என்னும் செஸ் போன்ற விளையாட்டுக்கள் மூளைக்கு போதிய செயல்பாடுகளைக் கொடுப்பதால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, புதிர்கள், குறுக்கெழுத்து போன்ற நினைவுப்படுத்தல் விளையாட்டுக்களிலும் குழந்தைகளை விளையாட வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Can You Increase Your Child’s Memory?

Have you seen your child losing concentration quite often, forgetting trivial things very easily? Then your child’s memory must be suffering.
Desktop Bottom Promotion