Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சுறுசுறுப்பா விளையாட விடுங்க; குழந்தைகளின் மன அழுத்தம் சரியாகும்

பதின் பருவ குழந்தைகளை பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தத்தினால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதோடு அனைத்து செயல்பாடுகளிலும் மாணவர்களின் ஈடுபாடு குறைகிறது. இந்த குழந்தைகள் விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்வது, அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவற்றின் மூலம் விடலை பருவத்தில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
7 வது படிக்கும் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்த குழந்தைகளும், உடல் ரீதியான செயல்பாட்டை அதிகரித்துக் கொண்ட குழந்தைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விடலைப் பருவ மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் சுறு சுறுப்பாக இருந்த மாணவர்களிடம் மன அழுத்த பாதிப்பு கணிசமாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடலைப் பருவ பையன்களுடன் ஒப்பிடும் போது பருவ வயது பெண்கள் தான் அதிக அளவுக்கு மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் கல்வித்திறன் பாதிப்பு, சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல் தற்கொலை போன்ற பயங்கர பாதிப்புகள் உண்டாகலாம். எனவே பெண்குழந்தைகளை அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
மற்றொரு ஆய்வில் தேர்வு எழுதும் நேரத்தில் மாணவர்களிடம் அவர்களின் எச்சில் கொண்டு ஆய்வு நடத்திய போது அவர்களுடைய நோய் எதிர்ப்புத்திறன் மற்ற நேரங்களை விட குறைந்திருந்தது. இதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கண்டறியப்பட்டது. எனவே எனவே குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
சத்துள்ள ஆரோக்கியமான உணவை கொடுப்பதன்மூலம் குழந்தைகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அது தன்னம்பிக்கையை கொடுப்பதோடு மன அழுத்தம் போக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications