For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க...

By Maha
|

திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திருமணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமென்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு முயற்சிப்பதை விட, இரண்டு மாதவிடாய் சுழற்சியானது முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். மேலும் இந்த செயலால், கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் நன்கு தெரிந்து கொள்வதோடு, அதனை சரிசெய்தும் கருத்தரிக்க முடியும். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களை பின்பற்றுவதன் மூலமும் எளிதில் கருத்தரிக்கலாம்.

பொதுவாக எளிதில் கருத்தரிப்பதற்கு சில கருவிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம். உதாரணமாக, ஓவுலேசன் ஸ்ட்ரிப் (ovulation strips) மற்றும் ஓவுலேசன் காலெண்டர் (ovulation calendars) போன்ற கருவிகளின் உதவியால் எளிதில் கருத்தரிக்க முடியும். எப்படியெனில், இவை எப்போது கருத்தரிக்க முயற்சித்தால் எளிதில் கர்ப்பமாக முடியும் என்பதை சொல்லும். மேலும் வாழ்க்கை முறை மாற்றங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், விரைவில் கர்ப்பமாகலாம்.

இப்போது விரைவில் கர்ப்பமாக எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things To Help You Get Pregnant

When you are trying to conceive and you have one missed chance after another, it is natural to get disappointed. But some of the things that can help you get pregnant fast are tools and others are lifestyle changes. Here are some of the things that can help you get pregnant quickly.
Story first published: Tuesday, June 11, 2013, 14:39 [IST]
Desktop Bottom Promotion