குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்...

By:

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தை என்பது ஒரு அற்புதமான ஒரு உறவு, குழந்தை பிறந்த பின்னர் வாழ்வே அருமையாக இருக்கும் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால் உண்மையில் குழந்தை பிறந்த பின்னர் ஒருசில தமக்கு பிடித்த செயல்களை செய்ய முடியாது. ஏனெனில் குழந்தை என்று வந்துவிட்டால், அவர்களது எதிர்காலம் நன்கு அமைய வேண்டுமென்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போது எந்த ஒரு வெட்டி செலவையும் செய்ய முடியாது. பிடித்ததை அவ்வளவு சுலபமாக வாங்க முடியாது, எதற்கெடுத்தாலும் பல முறை யோசிக்க வேண்டியிருக்கும்.

மேலும் நிறைய மக்கள் பெற்றோர் ஆன பின்பும், முன்பும் இருந்த வாழ்க்கைக்கு, அவ்வளவு பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அது தவறானது. குழந்தை பிறந்த பின்னர் தான், தம்பதியர்கள் எந்த ஒரு இடத்திற்கும் சரியாக செல்ல முடியாத நிலை இருக்கும். உதாரணமாக, இப்போது தம்பதியர் இருவரும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது குழந்தை இருந்தால் போக முடியுமா? முடியாது தானே!!!

ஆகவே தான், உங்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும், குழந்தை பெறுவதற்கு முன்பே அனுபவித்துவிட்டு, பின்னர் குழந்தையைப் பெற்றுக் கொண்டால், தமக்கு பிடித்ததை சரியாக அனுபவிக்க முடியவில்லையே என வருத்தமின்றி அழகான வாழ்க்கையை வாழலாம். சரி, இப்போது அவ்வாறு குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய சில செயல்களைப் பார்ப்போமா!!!

பார்ட்டி

குழந்தை பிறந்த பின்னர் எந்த ஒரு பார்ட்டியையும் சரியாக அனுபவிக்க முடியாது. ஏனெனில் குழந்தைகள் எப்போதும் தாயின் கையிலேயே இருப்பதால், அப்போது நிம்மதியாக பார்ட்டியை அனுபவிக்க முடியாது. மேலும் குழந்தைக்கு நிம்மதியான தூக்கமானது வேண்டும். பார்ட்டியிலோ அதிகமான சத்தம் இருக்கும். எனவே எந்த பார்ட்டியானாலும், குழந்தை பெறுவதற்கு முன்பே சென்று வருவது நல்லது.

உடைகள்

குழந்தைகள் பிறந்து விட்டால், உடையணிவதில் சற்று வித்தியாசங்கள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு விருப்பமான, மார்டன் உடையை அணிய வேண்டுமென்றாலும், முன்பே அணிந்து அனுபவித்துக் கொள்ள வேண்டும்.

பயணம்

குழந்தை பிறந்துவிட்டால் நினைக்கும் இடத்திற்கெல்லாம் செல்ல முடியாது. அதிலும் நீண்ட தூரப் பயணங்களை செய்யவே முடியாது. ஆகவே எந்த ஒரு நீண்ட துரப் பயணம் அல்லது ட்ரக்கிங் செல்வதாக இருந்தாலும், முன்பே சென்று சந்தோஷத்துடன் அதனை அனுபவித்துவிட வேண்டும்.

படங்கள்

இளமைப் பருவத்தில் அந்த மாதிரியான படங்கள் பார்ப்பது என்பது சாதாரண விஷயம். ஆனால் அதையே குழந்தைகள் பிறந்த பின்னரும் பார்த்தால், குழந்தைகளுக்கு அந்த பழக்கம் வந்துவிடும். எனவே அவற்றையெல்லாம் முன்பே ஆசை போகும் வரை பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.

தூக்கம்

குழந்தை பிறந்த பின்னர் சரியாக தூங்கவே முடியாது. சொல்லப்போனால், அப்போது தூக்கமானது மிகவும் குறைவாக தான் இருக்கும். எனவே தூங்க விருப்பமுள்ளவர்கள், முன்பே ஆசை தீரும் வரை தூங்கி, மகிழுங்கள்.

ஒயின்

சொல்லப்போனால், ஆல்கஹாலை சாப்பிடுவது இதுவே இறுதியாக இருக்கும். இந்த பழக்கத்தை குழந்தை பிறந்த பின்னர் நிறுத்திவிடுவது சிறந்தது. இல்லையெனில் குழந்தைகளும் அவற்றிற்கு பழகிவிடுவர். ஆகவே முன்பே இந்த மாதிரியான பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.

See next photo feature article

அழகு நிலையம்

இளமையில் எப்படி வேண்டுமானாலும், ஹேர் ஸ்டைலில் இருக்கலாம். அதிலும் அப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று உடலைப் பராமரிக்க நிறைய நேரம் இருக்கும். ஆனால் தாய் ஆன பின்பு, அனைத்திலும் அடக்கமாக இருக்க வேண்டும். அதிலும் ஹேர் ஸ்டைலும் டீசண்ட் ஆக இருக்க வேண்டும். ஆகவே எந்த ஒரு ஸ்டைலும் தாய் ஆவதற்கு முன்பு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read more about: pregnancy, basics, conceiving, kids, கர்ப்பம், அடிப்படை, குழந்தைகள்
English summary

Things To Do Before Having Kids

To inspire a married couple to live their life to the fullest before having kids. Here is a to-do list that you simply must follow before you get pregnant.
Story first published: Friday, December 14, 2012, 17:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter