இறந்து 300 வருடங்கள் கழித்து கண் திறந்த குழந்தை துறவி, வைரலாகும் வீடியோ பதிவு!

Subscribe to Boldsky

மெக்சிகோவில் இருக்கும் கூதலஜாரா கதீட்ரல் சர்ச்சில் முன்னூறு வருடங்களாக கெட்டுபோகாமல் இருக்க பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தை துறவி ஒருவரது உடல் திடீரென கண் விழித்து பார்த்தது என பதிவு செய்யப்பட்ட காணொளிப்பதிவு ஒன்று இணையத்தில் படுவேகமாக வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகவே இதுப்போன்ற காணொளிப்பதிவுகள் அவ்வப்போது இணையத்தில் பரவவிட்டு உலா வருவது சாதாரணம் தான். வானில் கிருஷ்ணர் உருவம், இயேசு உருவம் தெரிந்தது, ஏலியன்கள் வானில் தோன்றின, ஐந்து தலை நாகம் என பலவகையான காணொளிப்பதிவுகள் நாம் கண்டிருப்போம்.

இதுவும் அது போன்றதா அல்ல உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பார்வையாளர்கள்!

மெக்சிகோவின் கூதலஜாரா கதீட்ரல் சர்ச்சில் பார்வையாளர்கள் நேரத்தின் போது. ஒரு பார்வையாளர் அந்த சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த முன்னூறு வருடங்களுக்கு முன் இறந்த, பதப்படுத்தி வைக்கப்பட்ட குழந்தை துறவி உடலை வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார். அந்த பதிவில் தான் துறவி கண் விழித்தது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

முதலில் பார்க்கவில்லை!

இந்த காணொளிப்பதிவை ரெகார்ட் செய்தவர், முதலில் நான் இதை கவனிக்கவில்லை. இதை பதிவு செய்து நான்கைந்து மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்த போது தான், இதை கண்டு வியந்தேன் என கூறியுள்ளார்.

கூதலஜாரா கதீட்ரல் சர்ச்சில்!

இந்த சர்ச்சுக்கு வரும் பார்வையாளர்கள், இந்த துறவியிடம் வேண்டினால், வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சிறு கதை!

இந்த குழந்தை துறவியின் தந்தை தான், இவரை குத்தி கொன்றார் என்றும். அதற்கு காரணம், தந்தை கேதலிக்காக மாற கூறி, அதை குழந்தை துறவி ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

தவறை உணர்ந்த தந்தை!

இந்த சம்பவத்திற்கு பிறகு தனது தவறை உணர்ந்த தந்தை, மிகவும் பயந்த வண்ணம் மாறினார் என்றும், வீட்டைவிட்டு கத்தியப்படியே ஓடிவிட்டார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.

வேக்ஸிங் செய்யப்பட்ட உடல்!

அதன் பின், குழந்தை துறவி கடைசி மூச்சில் இருந்த நிலையில், மக்கள் அவரை சர்ச்சுக்கு கொண்டு சென்றனர். அங்கேயே அவரது உடல் வேக்ஸிங் செய்து வைக்கப்பட்டது. இது நடந்து முன்னூறு வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னிக் திருவிளையாடலா?

இந்த டிஜிட்டல் யுகத்தில் முடியாதது என எதுவும் இல்லை. ஏற்கனவே இயேசு கண் திறந்தார், இயேசு கண்களில் இரத்தம் வழிகிறது என பல புகைப்படங்கள், காணொளிப்பதிவுகள் நெட்டில் உள்ளன. அந்த பட்டியலில் இது புதியதாக சேர்ந்துள்ளதோ....???

வீடியோ!

வைரலாகி வரும் அந்த காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Moment 'child saint' corpse opens and closes her eyes 300 YEARS after she died

Moment 'child saint' corpse opens and closes her eyes 300 YEARS after she died
Story first published: Monday, September 26, 2016, 14:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter