For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறியாத பி.வி. சிந்து பற்றிய வியக்கவைக்கும் 8 உண்மைகள்!

|

பி.வி. சிந்து இன்று இவரை பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது. ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவை மெய்ப்பிக்க போராடி வரும் வீர மங்கை. இறகுப்பந்து ஆட்டத்தின் ரியோ 2016 ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று இந்தியர்களின் மனதில் பாசக்கார சகோதரியாக இடம் பெற்றிருக்கிறார்.

ரியோ 2016 ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் தொடர்ந்து பெண்கள் தங்கள் பங்களிப்பை பெருமளவு அளித்து, இந்தியாவின் பெயரை தலைநிமிர செய்துக் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் தருணமாகும்.

அது மட்டுமின்றி இந்தியா என்றாலே கிரிக்கெட் மட்டும் தான் வேறு விளையாட்டுக்கு ஊக்கமளிக்க ரசிகர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்ற கூற்றை தவிடுபொடியாக்கி மல்யுத்தம், இறகுப்பந்து ஆட்டம் என இரவு பகல் பாராமல் பார்த்து, சமூக தளங்கள் மூலம் வீரர்களுக்கு இரசிகர்கள் தங்கள் ஆதரவு அளித்து வருவதும் ஓர் பெரும் மாற்றம் உண்டாகியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

இனி, இறகுப்பந்து ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பி இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள பி.வி. சிந்து பற்றி பலரும் வியக்க வைக்கும் உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர்!

பெற்றோர்!

பி.வி.சிந்து 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் இருவருமே நுட்பமான கைப்பந்தாட்ட வீரர்கள் ஆவார்கள்.

அர்ஜுனா விருது!

அர்ஜுனா விருது!

பி.வி.சிந்துவின் தந்தை ரமணா கைப்பந்தாட்டத்தில் செய்த சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வென்றவர் ஆவார்.

விடாமுயற்சி!

விடாமுயற்சி!

21 வயது நிரம்பிய பி.வி.சிந்து தினமும் 27 கிலோமீட்டர் பயணம் செய்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தவர் ஆவார். தினமும் 4 மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சி மேற்கொள்ள சென்றுவிடுவாராம் சிந்து.

இந்தியன்!

இந்தியன்!

கடந்த 2014-ம் ஆண்டு என்.டி.டி.வி இவரை 2014-ம் ஆண்டின் சிறந்த இந்தியர் என அறிவித்து கௌரவித்தது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

18 வயதிலேயே அர்ஜுனா விருது வென்று சாதனை செய்தவர் பி.வி.சிந்து! தன் விளையாட்டின் மீது கொண்ட பேரார்வம் காரணமாக தனக்கு மிகவும் நெருக்கமான சகோதரியின் திருமணத்திற்கு கூட செல்லாமல் விளையாட சென்றவர் பி.வி.சிந்து

முதல் பெண்!

முதல் பெண்!

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய பெண் என்ற கௌரவும் பெற்றார்.

பத்மஸ்ரீ!

பத்மஸ்ரீ!

கடந்த 2015-ம் ஆண்டு பி.வி. சிந்து இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ பெற்றார்.

உத்வேகம்!

உத்வேகம்!

பி.வி.சிந்து முன்னாள் இறகுப்பந்து ஆட்ட வீரர் புல்லேலா கோபிசந்த்தை பார்த்து உத்வேகம் பெற்றவர். அவரை தனது முன்மாதிரியாக வைத்து தான் விளையாட துவங்கினார். புல்லேலா கோபிசந்த் இங்கிலாந்து இறகுப்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Indian Olympic Star P.V Sindhu

Lesser Known Facts About Indian Olympic Star P.V Sindhu, take a look on here
Desktop Bottom Promotion