Latest Updates
-
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
சனி-சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பாம்புகளை பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் தகவல்கள்!
இந்தியாவில் மொத்தம் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. சில வகையான பாம்புகளின் விஷத்தன்மை, நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகின்றது.
இந்த வகையை சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் போன்றவை. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தம் உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் பாம்பு இந்த வகையை சேர்ந்தது ஆகும்.

தகவல்கள்!
*ஓராண்டுக்கு பாம்புகளால் மட்டும் உலகில் ஒரு லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள்.
*பிரேசிலில் இருக்கும் ஓர் தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை. அங்கு ஐந்து மீட்டர் தூரத்திற்கு ஓர் பாம்பு இருப்பதே இதற்கான காரணம்.
*பாம்புகளும் இரண்டு தலைகளுடன் பிறக்க வாய்ப்புகள் உண்டு. இதில், வேடிக்கை என்னவெனில், இரண்டுமே உணவு உண்ணசண்டையிட்டு கொள்ளும்.

தகவல்கள்!
*உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.
*பாம்புகளைவிட தேனீக்களால் தான் மனிதர்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர்.
*பாம்புகளால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.

தகவல்கள்!
*பிளாக் மாம்பா எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
*டைட்டநோபோ எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய, நீளமான, எடை அதிகமான பாம்பாகும். இது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஆகும்.
*பாம்புகள் மகுடியின் சப்தத்திற்கு ஏற்ப அசைவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவிற்கு ஏற்ப தான் அசையும்.

தகவல்கள்!
*பாம்புகள் தங்களது நாக்கை வைத்து தான் நுகர்கின்றன.
*பாம்புகளுக்கு கண்ணிமைகள் இல்லை.
*பாம்புகள் திறந்த கண்களுடன் தான் உறங்கும்.

தகவல்கள்!
*அமெரிக்கர்களுக்கு பாம்புகள் என்றால் மிகவும் பயம். 51% அமெரிக்கர்களுக்கு பாம்பு என்றால் பயம்.
*அதிர்வுகளை வைத்து பாம்பு மற்ற விலங்குகளின் வருகையை உணர்கின்றன.
*சில வகை பாம்புகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிர்வாழும் திறன் கொண்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications