For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

By Ashok CR
|

பெண்கள் என்று வரும் போது, இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சில விதிமுறைகள் பெண்களுக்கு பயன் அளிப்பதாகவும், சரியானதாக பட்டாலும் கூட, பல விதிமுறைகள் மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக இருக்கும். மேலும் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது.

அப்படிப்பட்ட சடங்குளில் ஒன்று தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்கள். பெற்றோர்களின் கடைசி காரியங்களை மகனே செய்ய வேண்டுமே என இந்து மதத்தின் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. இந்த கடைசி காரியங்களை பெண்கள் செய்ய அனுமதிப்பதில்லை. ஆண்டாண்டு காலமாக சர்ச்சையில் இருக்கிறது இந்த விதிமுறை.

சுவாரஸ்யமான வேறு: மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள தம்பதிகள் இருக்கும் உதாரணங்களை பற்றி பார்க்கலாமா? அப்படிப்பட்டவர்களின் கடைசி காரியத்தை அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண் உறவினரே செய்ய வேண்டும். அதனால் பெற்றோர்களின் மீதான பெண்களின் உரிமையை இந்த விதிமுறை பறிக்கும் விதமாக அமைகிறது. அதே போல் பெற்றோர்களின் சொத்துகளின் மீதும் அவர்களின் உரிமையை இந்த விதி பறிக்கிறது.

ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த விதிமுறை சற்று தளர்வு பெற்று வருகிறது. பெண்கள் தங்களின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். பெற்றோருக்கான கடைசி காரியங்களை பெண்கள் செய்ய முடியாது என இனியும் அவர்களுக்கு தடை போட முடியாது. ஆனால் இந்த கடைசி காரியங்களை ஏன் பெண்கள் செய்ய அனுமதிப்பதில்லை என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா? என்னவென்று பார்க்கலாமா?

இதுப்போன்று வேறு: இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்வுபூர்வமானவர்கள்

உணர்வுபூர்வமானவர்கள்

பெண்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள் என்றும் உணர்வுபூர்வமானவர்கள் என்றும் இந்து சமய நூல்கள் கூறுகிறது. இறந்தவர்களின் மீது அவர்கள் அதிகளவில் பாசம் கொண்டிருப்பார்கள். அதனால் அந்த இறப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் கடைசி காரியங்களில் ஈடுபடும் போது, மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள். இதனால் சடங்குகளை முழுமையாக செய்ய முடியாமல் போகும்.

பெண் காரணிகள்

பெண் காரணிகள்

பெண்மை எனும் காரணங்கள் மற்றும் கர்ப்பம், மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் கடைசி காரியங்களை செய்வதற்கு இடையூறாக இருக்கும். இந்த காரணிகளை மனதில் கொண்டு தான் கடைசி காரியங்களில் பெண்களை ஈடுபடுத்த அனுமதிப்பதில்லை.

வெறும் நொண்டிச் சாக்கு?

வெறும் நொண்டிச் சாக்கு?

இந்த காரணங்கள் ஓரளவிற்கு சரியாக பட்டாலும், கடைசி காரியங்களில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்ற கடினமான விதிமுறை ஒரு நொண்டிச் சாக்காகவும் தெரிகிறது. ஆனால் இந்த துன்பத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவமுடைய பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது போக, மாதவிடாய் என்பது ஒரு உடல்நல நிலையே. இதை காரணம் காட்டி, கடைசி காரியத்தில் அவர்களை ஈடுபடுவதை தடுக்கக்கூடாது. ஆனால் இந்து மதத்தில் மாதவிடாயை அசுத்தமான ஒன்றாக பார்ப்பதால், அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களை எந்த ஒரு சடங்கையும் செய்ய விடுவதில்லை.

பெற்றோரின் சொத்துகளின் மீது உரிமை கோருவதை தடுப்பதற்காகவே இந்து சமயத்திரு நூலில் இப்படிப்பட்ட விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது என சில அறிஞர்கள் கூறுகிறார்கள். தந்தை குடும்பத் தலைவனாக இருக்கும் இந்திய சமுதாயத்தில், பெண்களை கடைசி காரியங்களை செய்ய விடாமல் செய்தால், சொத்துக்களின் மீது அவர்கள் உரிமை கோர முடியாது.

மாறும் தோரணை

மாறும் தோரணை

மாறுகின்ற காலத்தோடு, பெண்களுக்கான தோரணைகளும் மாறிக்கொண்டு வருகிறது. தங்களுக்கு விதிக்கப்பட்ட விலக்குகளை உடைத்து தங்களின் உரிமைகளை கோர ஆரம்பித்து விட்டனர். தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருக்கும் பெண்கள் அவர்களுக்கான கடைசி காரியங்களில் இப்போது ஈடுபடுகின்றனர். பெண்கள் தங்களின் உரிமையை, தாங்கள் யாருக்கும் தாழ்வானவர்கள் அல்ல மற்றும் தங்களின் மதிப்பை புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட மாற்றமே ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.

அதனால் இன்றைய மங்கைகள், தங்களை சிறுமைப்படுத்துகிற வழக்கங்களை எதிர்த்து நின்று, தங்களின் விடுதலை மற்றும் உரிமையை கோருகின்றனர். தன் சக்தியை வெளிக்காட்டும் பெண்களால் இந்து மதம் நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Women Cannot Perform Last Rites In Hinduism?

Why is it that women cannot perform the last rites in Hinduism? Let us find out. The Hindu scriptures say that the last rites or antim sanskar of parents can only be performed by the son.
Desktop Bottom Promotion