Latest Updates
-
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா?
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார்.
சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!
இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

அறிகுறி 1
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8
ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications