For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...

By Ashok CR
|

இந்து புராணங்களுக்கும், அதன் மர்ம கதைகளுக்கும் முடிவே கிடையாது. நீங்கள் உங்களை எந்தளவுக்கு இந்த மர்ம கதைகளில் கொண்டு போகுறீர்களோ அதற்கேற்ற உட்கிளர்ச்சியை அடைவீர்கள். ஒவ்வொரு சடங்குக்கும் அழகாக விவரிக்கப்பட்ட கதைகளின் வடிவத்தில், ஒரு விளக்கத்தை நாம் காண நேரிடலாம். தலைமுறை கடந்து இந்த கதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சரி, இன்று இந்து புராணத்தில் இருந்து அதே போன்ற மற்றொரு சுவாரசியமான கதையை பற்றி இப்போது பார்க்க போகிறோம். இது அனைத்து இந்து சமயத்திரு நூல்களிலும் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இக்கதை, இந்த அண்டத்தை காக்கும் விஷ்ணு பகவானை பற்றியதாகும். உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் வந்து சேர்வார் என்று நம்பப்படுகிறது.

சுவாரஸ்யமான வேறு: சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அதனால் மனித இனத்தை மிரட்டும் அவ்வகை தீய சக்திகளை அழிக்க காலத்திற்கேற்ப ஒவ்வொரு அவதாரத்தில் தோன்றியுள்ளார் விஷ்ணு பகவான். இது வரை விஷ்ணு பகவான் 9 அவதாரங்களை எடுத்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அவருடைய பத்தாவது அவதாரம் கலியுகம் முடியும் தருவாயில் வெளிப்படும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் இந்த பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து தசாவதாரம் என்று அழைக்கின்றனர்.

சத் யுகத்தின் போது, இந்த பூமி மீது முதல் மூன்று அவதாரங்கள் எடுக்கப்பட்டது. அடுத்த மூன்று அவதாரங்கள் திரேட்டா யுகத்தில் எடுக்கப்பட்டது. ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது அவதாரங்கள் ட்வபரா யுகத்தில் எடுக்கப்பட்டது. கலியுகத்தில் பத்தாவது அவதாரம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விஷ்ணு பகவானின் இந்த ஒவ்வொரு அவதாரத்தை பற்றி கொஞ்சம் விவரமாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மச்ச அவதாரம்

மச்ச அவதாரம்

சத் யுகத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய மீனின் வடிவத்தில் அவதரித்தார் விஷ்ணு பகவான். ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின் போது, மச்ச அல்லது மீனின் அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் படகில் இருந்து மனு மற்றும் பிற உயிர்களையும் காப்பாற்றினார். மனு என்பவர் இந்த உலகத்தின் முதல் மனிதன். அவன் மூலமாக தான் மனித இனம் பெருகியது என்று நம்பப்படுகிறது. இந்த பெரிய வெள்ளத்தின் போது, இந்த உலகத்தில் உள்ள மீனின் வகைகள் ஒவ்வொன்றிலும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் படகில் போட்டு கொண்டான். அவன் புதிய உலகிற்கு பயணிக்க மீனின் வடிவத்தில் இருந்த விஷ்ணு பகவான் உதவினார்.

கூர்ம அவதாரம்

கூர்ம அவதாரம்

விஷ்ணு பகவான் கூர்ம அல்லது ராட்சச ஆமை வடிவத்தின் மூலமாக தன் இரண்டாம் அவதாரத்தை எடுத்தார். பாற்கடலை கடைவதற்கு மந்திரசாலா மலை கடையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பாற்கடல் மிகவும் ஆழமாக இருந்ததால், மந்திரசாலா மலை கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது ராட்சச ஆமை வடிவத்தை எடுத்த விஷ்ணு பகவான் அந்த மலையை தன் தோல் மீது சுமந்து கொண்டார்.

வராக அவதாரம்

வராக அவதாரம்

விஷ்ணு பகவானின் மூன்றாம் அவதாரம் இது. வராக என்ற வார்த்தைக்கு காட்டு பன்றி என்ற அர்த்தமாகும். அண்டத்துக்குரிய பகுதியின் கீழ் இந்த உலகத்தை எடுத்துச் சென்ற ஹிரன்யக்ஷா என்ற அரக்கனிடம் கொல்லவே விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். ஹிரன்யக்ஷாவை வராக வடிவத்தின் மூலம் கொன்ற பிறகு, இந்த உலகத்தை மீண்டும் அது இருந்த இடத்திலேயே வைத்தார் விஷ்ணு பகவான்.

நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம்

விஷ்ணு பகவானின் கடுஞ்சினமான அவதாரம் இது. நரசிம்மா என்றால் பாதி மனிதன் பாதி சிங்கம். சத் யுகத்தில் ஹிரன்யகஷிபு என்ற அரக்கனை கொல்ல விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன்னை எந்த ஒரு மனிதன் அல்லது விலங்கினாலும், வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், பகலிலும் இரவிலும், பூமியிலும் ஆகாயத்திலும், எந்த ஒரு ஆயுதத்தை கொண்டும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான். அதனால் பாதி மனிதன் பாதி சிங்க உருவத்தை எடுத்த விஷ்ணு பகவான், பொழுது சரியும் நேரம், அந்த அரக்கனின் வீட்டில், அவனை தன் மடியில் போட்டு தன் நகத்தினால் கொன்றார்.

வாமண அவதாரம்

வாமண அவதாரம்

திரேட்டா யுகத்தில் இந்த அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். ஒரு முறை பாலி என்ற அசுர அரசன் இந்த உலகத்தை ஆண்டு வந்தான். மிகவும் சக்தி வாய்ந்து விளங்கிய அவன் மூவுலகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இருப்பினும் தர்ம காரியங்களின் மீது நம்பிக்கை கொண்ட நல்லதொரு அரசனாகவே இருந்தான். அதனால் வாமண அல்லது குள்ள பிராமிண மனித அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் அவனிடம் மூன்றடி நிலத்தை கேட்டார். இதற்கு பாலி ஒப்புக்கொண்டான். கடவுள் தன் காலடியை எடுத்து வைத்த உடனேயே, ஆகாயம் மற்றும் கீழ் உலகத்தை எடுத்துக் கொண்டார். அது விஷ்ணு பகவான் என்று உணர்ந்த பாலி, அவர் அடுத்த எட்டை எடுத்து வைக்க தன் தலையை கொடுத்தான். பாலியின் தலை மீது விஷ்ணு பகவான் கால் வைத்த உடனேயே உலகத்திற்குள் நுழைந்து மோட்சத்தை பெற்றான் பாலி.

பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்

இந்து மதத்தில், பரசுராம் என்பவன் முதல் ஷத்ரிய பிராமிணன் ஆகும். அராஜகம் செய்து வந்த ஷத்ரியர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே பரசுராமன் அவதரித்தார். சிவபெருமானை வழிப்பட்ட பரசுராமன், ஒரு கோடாரியை பரிசாக பெற்றான். அதனை வைத்து ஷத்ரிய வம்சத்தையே இந்த உலகத்தை விட்டு துடைத்து எடுத்தான்.

ராம அவதாரம்

ராம அவதாரம்

அயோத்யாவின் இளவராசான ராமர் அசுர அரசரான ராவணனை அழித்தார். ராமரின் மனைவியை ராவணன் இலங்கைக்கு தூக்கி சென்ற போது, அவளை தேடி ராமர் வந்தார். பெரிய ஒரு போருக்கு பிறகு, ராவணனை வீழ்த்தி நல்லொதொரு ஆட்சியை அமைத்தார்.

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம் விஷ்ணு பகவானின் புகழ் பெற்ற ஒரு அவதாரமாகும். ட்வபரா யுகத்தின் போது கிருஷ்ணர் வடிவத்தில் தன் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். தீய அரசனான கம்சனை கொல்வதற்காகவே அவர் கிருஷ்ணனாக பிறந்தார். இந்த அரசன் கிருஷ்ணனின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் கிருஷணரே முக்கியமான பங்கை வகித்தார். அர்ஜுனனுக்கு குருவாக இருந்து, குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற உதவினார்.

புத்த/பலராம அவதாரம்

புத்த/பலராம அவதாரம்

புத்தரை விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரமாக சிலர் கருதினாலும் கூட, கிருஷ்ணரின் மூத்த சகோதரனான பலராமனே விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரம் என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரத்தை சுற்றியுள்ளது.

கல்கி

கல்கி

கல்கி அல்லது தீமைகளின் அழிப்பான் தற்போதுள்ள கலியுகத்தின் முடிவில் அவதிரப்பான் என்று நம்பப்படுகிறது. இந்த அவதாரத்தின் போது ஒரு வெள்ளை குதிரை வடிவில், கையில் ஒரு பெரிய வாளோடு, மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் சக்தியை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. தீமையை அழித்து கல்கி யுகத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது. நேர்மையை காத்து மீண்டும் சத் யுகத்தை தொடங்கி வைப்பார் கல்கி என்றும் சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dashavatar: Ten Avatars Of Lord Vishnu

Lord Vishnu is believed to have taken on nine incarnations or avatars till now and the tenth avatar will descend on Earth at the end of the Kali Yuga. Hence, these ten incarnations of Lord Vishnu is collectively known as the Dashavatar.
 
Desktop Bottom Promotion