Latest Updates
-
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா?
அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்...

* பூனை குட்டியை வளர்க்கும் போது, அதற்கு ஒரு நாளைக்கு பெரிய பூனைக்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு மடங்கு அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் வேண்டும். ஏளெளில் அதன் வளர்ச்சிக்கு அதிகமான சத்துக்கள் வேண்டும். அதற்காக மிகவும் அதிகமான அளவு உணவுகளைக் கொடுத்துவிடக் கூடாது.
* பூனைக்குட்டி பிறந்து 5-6 வாரத்திற்கு பிறகு, தினமும் 4 முறை உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் சிறுசிறு இடைவேளைக்குப் பிறகு தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஏனெனில் அதற்கு இருப்பது மிகவும் சிறிய வயிறு. ஆகவே அதிகமாக கொடுத்தால், அதற்கு இம்சையாக இருக்கும்.
* பூனைக் குட்டிகளுக்கு நாய்களின் உணவுகளை கொடுக்க கூடாது. ஏனெனில் பூனைகளுக்கு டாரின் என்னும் ஊட்டச்சத்துப் பொருள் வேண்டும். இதனால் அதற்கு இதய நோய் வராமல் இருப்பதோடு, கண்களும் நன்கு தெரியும். ஆகவே அதற்கு சரியாக பூனையின் உணவை மட்டும் கொடுக்க வேண்டும்.
* 8-10 மாதத்திற்குப் பிறகு, வெறும் பால் மற்றும் பூனை உணவைக் கொடுக்க வேண்டாம். அப்போது அதற்கு சற்று சாதம், தயிர், பால் என்று கலந்து கொடுக்க வேண்டும். இதனால் பூனைக்குட்டிகள்கள் விரைவில் வீட்டில் சமைக்கும் மற்ற உணவுகளை சாப்பிட பழகிவிடும்.
* தினமும் பூனைக் குட்டிகளை குளிப்பாட்ட வேண்டாம். எப்போது அதன் மேல் துர்நாற்றம் வருகிறதோ, அப்போது மட்டும் குளிர்ந்த நீரால் குளிப்பாட்ட வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் அதன் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* தினமும் பூனைக்குட்டியின் மயிர்களை சீவ வேண்டும். இதனால் அதன் மேல் இருக்கும் தூசிகள், அழுக்குகள், கிருமிகள் போன்றவை உதிர்ந்துவிடும். பூனைக்குட்டியும் சுத்தமாக இருக்கும்.
* ஏதோ சில நாட்கள் வேண்டுமென்றால், பூனைக்குட்டிகளை நம்மோடு பெட்டில் படுக்க வைக்கலாம். ஆனால் அப்படியே பழக்கிவிடக் கூடாது. ஏனெனில் பின் அது எப்போதுமே உங்களுடனேயே படுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.
* பூனைக்குட்டிகளை மாலை நேரத்தில் விளையாட வைக்க வேண்டும். இதனால் அதன் எலும்புகள் நன்கு வலுபெறுவதோடு, நல்ல வளர்ச்சி ஏற்படும்.
* பூனைக்குட்டிகள் படுப்பதற்கு, சாப்பிடுவதற்கு என்று ஏதேனும் ஒரு கூடையை அழகாக அமைத்து, அதனை பராமரித்து வந்தால், பூனைக்குட்டியும் சமத்துக் குட்டியாக அந்த பழக்கத்திற்கு பழகிவிடும்.
* பூனைக்குட்டிகள் வளர்வதற்கு ஆரம்பித்ததும், அதன் பற்கள், காதுகள் மற்றும நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அது அங்கும், இங்கும் ஓடி விளையாடுவதால், அதன் நகங்களில் கிருமிகள் எளிதில் வந்துவிடும். பின் அது மட்டும் நோயால் பாதிக்கப்படுவதோடு, வீட்டில் இருப்போரும் பாதிக்கப்படுவர். ஆகவே அதன் நகங்களை சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.
எனவே, பூனைக்குட்டியை வளர்க்க வேண்டுமென்பவர்கள மேற்கூறியவற்றையெல்லாம், நினைவில் வைத்து, பின் வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டு பூனையும் அழகாக, சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











