For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிக்ஸியை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மிக்ஸி. மிக்ஸி சரியாக இல்லாவிட்டால் வீட்டில் பல ரெசிபிக்களை செய்யவே முடியாது. ஏனெனில் மிக்ஸி இருந்தால் தான் பல சுவையான சமையல்களுக்கு தேவையான மசாலாவை செய்ய முடியும். எனவே மிக்ஸியை சீரான முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு மிக்ஸியை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய வேண்டும்.

இங்கு மிக்ஸியை சுத்தம் செய்ய உதவும் சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி மிக்ஸியை சுத்தம் செய்தால், அதில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கிவிடும். சரி, இப்போது மிக்ஸியை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சையின் தோல்

எலுமிச்சையின் தோல்

எலுமிச்சையில் இருந்து சாற்றினை பிழிந்த பின்னர், அந்த தோலைக் கொண்டு மிக்ஸியை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், மிக்ஸியில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன், துர்நாற்றமும் நீங்கும்.

வினிகர்

வினிகர்

சில காய்கறிகள் மிக்ஸியில் கறைகளை ஏற்படுத்திவிடும். அத்தகைய கறைகளை வினிகரை நீரில் கலந்து, மிக்ஸியில் ஊற்றி, 2 நொடிகள் அடித்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை மிக்ஸியில் கறை அதிகம் இருந்தால், வினிகருடன் நீரை அளவாக ஊற்றி அடிக்க வேண்டும்.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடரை நீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு மிக்ஸியை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் அழுக்குகள் மட்டுமின்றி, துர்நாற்றமும் நீங்கும்.

டிடர்ஜென்ட் நீர்மம்

டிடர்ஜென்ட் நீர்மம்

2 துளிகள் டிடர்ஜென்ட் நீர்மத்தை மிக்ஸியில் ஊற்றி, அதில் சிறிது நீர் சேர்த்து, ஒருமுறை மிக்ஸியை ஓட்டி, பின் சுத்தமான நீரில் கழுவினால், கறைகள் நீங்கிவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் பயன்படுத்தி மிக்ஸியை கழுவினால், மிக்ஸியில் உள்ள துர்நாற்றம் மட்டுமின்றி, மிக்ஸி பளபளவென்று ஜொலிக்கும். அதற்கு ஆல்கஹாலை நீருடன் சேர்த்து கலந்து, மிக்ஸியில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Ways To Clean A Mixer Grinder

Learn how to clean your mixer grinder in five simple ways. Here are a few kitchen cleaning tips to follow.
 
Desktop Bottom Promotion