Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

செல்ல நாய்க்கு நோய் இருப்பதை கண்டறிய சில டிப்ஸ்...

Posted by:
Updated: Monday, February 11, 2013, 18:14 [IST]

How Find Your Dog Is Sick
 

பொதுவாக எல்லா நாய்களும் தங்கள் வாழ்நாளில் வியாதிபடுகின்றன. அந்த வியாதி ஆபத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலும், அவற்றிற்கு என்று இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அதன் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது, நாய்களை ஆசையாக வளர்ப்போரின் கடமை. எனவே ஆசையான வளர்க்கும் நாய்களுக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையெனில், மருத்துவரிடம் அழைத்துச் சென்று, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது அவசியமாகிறது. ஆனால் சிலரால் தங்களின் நாய் உண்மையாகவே வியாதியின்றி, ஆரோக்கியமாக உள்ளது என்று கூறுவது மிகவும் கடினம். எனவே அத்தகையவர்களுக்கு, வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* முதலில் ஆரோக்கியமான நாய் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டால், நாய் நோய் வாய்பட்டுள்ளதா இல்லையா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். நாய் ஆரோக்கியமானதாக இருந்தால், அது நிமிடத்திற்கு 15-20 முறை சுவாசிக்க வேண்டும். காதுகள் சுத்தமாகவும், நாற்றமில்லாமலும் இருக்க வேண்டும். அதன் முடியானது மென்மையாகவும், வழுக்கை இல்லாமலும், சொறிப்பிடித்தது போன்றும் இருக்கக்கூடாது.

* முக்கியமாக அதனுடைய தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். நாய் நோய்வாய்பட்டு உள்ளது என்றால், அதன் உடலில் ஏற்படும் மாற்றங்களாவன:

- சிவந்த மற்றும் வீங்கிய கண்கள்
- மூக்கில் நீர் வடிதல்
- காதுகளில் அடிக்கடி நாய் சொறியும்
- உடல் எடையில் மாற்றம்
- வித்தியாசமான நாற்றம்
- ஆங்காங்கு புடைப்புகள் மற்றும் கட்டிகள்

* நாய் நோய்வாய்பட்டிருந்தால், அதன் நடத்தையிலும் மாற்றங்கள் இருக்கும். சில சமயங்களில் நோய்வாய்பட்டுள்ள போது, அதன் நடத்தை கடுமையாக மாறும். மேலும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் வெளிப்புறத்தில் தென்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

- வாந்தி, இருமல், அல்லது தும்மல்
- மூச்சிறைப்பு(உடல் உழைப்பு இல்லாத போதும்)
- பசியின்மை அல்லது உடல் நீரின் அளவு இழப்பு
- கடித்தல், பிராண்டுதல் மற்றும் உடலை சொறிதல்
- வழக்கத்திற்கு மாறான நடத்தைகள் (கீழே விழுதல், எப்போதும் தூக்கம், நடுக்கம்)

* நாயின் ஈறுகளின் நிறம் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான ஈறுகள் இளஞ்சிவப்பில் இருக்க வேண்டும். ஆனால், நாயின் ஈறுகள் மஞ்சள், சாம்பல், வெள்ளை, அல்லது நீல நிறமாக காணப்பட்டால், அது நோய்வாய்பட்டதற்கான அறிகுறி. எனவே அப்போது, உடனடியாக ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

* நாய்க்கு நீர் சேர்க்கை உள்ளதா என்று கண்டறியவும். நீர் சேர்க்கையை கண்டறிய நாயின் கழுத்து பகுதியின் தோலை மேல் இழுத்து விடுவும். தோல் கழுத்தோடு ஒட்டிக்கொண்டு காணப்பட்டால், நாய்க்கு நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.

எனவே சில பொதுவான வியாதிகளையும் அவற்றிற்கான அறிகுறிகளையும் அறிந்து கொண்டால், நாய்க்கு நோய் தாக்கி இருப்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக, நாய்க்கு ஜலதோஷம் இருந்தால், அதற்கு நடுக்கமும் தளர்வும் காணப்படும். மேலும் பசியின்மை மற்றும் சோர்வாக காணப்படும். நாய்க்கு காய்ச்சல் இருந்தால், மிகவும் சோர்வாகவும், உடல் தளர்ந்தும் காண்படும்.

குறிப்பு:

* நாய் நோய்பட்டுள்ளதா என்று தங்களுக்கே தெரியவில்லை என்றால் உடனடியாக ஒரு கால் நடை மருத்துவரிடம் இட்டு செல்லவும்.

* வீட்டிற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை அடையாளம் கண்டு கொள்வதும், அதன் தொலைபேசி எண்கள் மற்றும் விலாசங்களை குறித்து கையில் வைத்து கொள்வதும், தங்களின் நாய் நோய்பட்டுள்ளபோது உடனடியாக அழைத்து செல்வதற்கு உதவியாக இருக்கும்.

Story first published:  Monday, February 11, 2013, 18:14 [IST]
English summary
We must acknowledge the fact that every pet is a social animal. They respond to us in the same way as we treat them, so we must make sure that we handle them delicately. Some of the people don't know about their pet is in sick or not. So Here some of the tips are given below.
Subscribe Newsletter

Bold Talk