For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூ வச்சு.. ஸ்டிக்கர் ஒட்டி.. முத்து, மணி கோர்த்து.. இப்படி அலங்கரிங்க நவராத்திரி ஆரத்தி தட்டை..!

By Maha
|

பொதுவாக இந்து மத சடங்குகள் மற்றும் பூஜைகள் அனைத்திலும் நிச்சயம் ஆரத்தி தட்டு இருக்கும். இந்த ஆரத்தி தட்டில் பூஜைக்கான சாமான்கள் வைத்து அலங்கரிக்கப்படும். அதிலும் தற்போது நவராத்திரி பூஜை நடந்து கொண்டிருப்பதால், இந்த பூஜைக்கு பயன்படுத்தும் ஆரத்தி தட்டை பலவாறு அலங்கரிக்கலாம்.

அப்படி ஆரத்தி தட்டில் ஒருசில பொருட்கள் தவறாமல் வைக்கப்படும். அதில் விளக்கு, குங்குமம், சந்தனம், சில சமயங்களில் சிறிய கடவுள் சிலைகள் கூட வைத்து அலங்கரிப்பார்கள். அத்தகைய ஆரத்தி தட்டில் பல்வேறு டிசைன்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. என்ன தான் டிசைனான தட்டுகளாக இருந்தாலும், காப்பர் தட்டில் வைப்பது தான் மிகவும் சிறந்தது.

இப்போது அந்த நவராத்திரி ஆரத்தி தட்டை எளிமையான பொருட்களால் எப்படி அழகாக அலங்கரிப்பது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

ஆரத்தி தட்டின் நடுவில் அழகான கோலம் அல்லது டிசைன் போட்ட ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு, தட்டின் முனையில் தங்க நிற ஸ்டிக்கரை சுற்றிக் கொண்டு, பின் வேண்டிய பொருட்களை வைக்கலாம்.

பூக்கள்

பூக்கள்

ஆரத்தி தட்டை அலங்கரிக்க சிறந்த பொருள் என்றால் அது பூக்கள் தான். ஆகவே தட்டில் அழகான பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். குறிப்பாக சாமந்திப் பூ சிறந்ததாக இருக்கும்.

வெற்றிலை

வெற்றிலை

ஆரத்தி தட்டைச் சுற்றி வெற்றிலையை வட்டமாக அடுக்கி, அதில் பூக்கள் மற்றும் இதர பூஜை சாமான்களை வைத்து அலங்கரிக்கலாம். இதனால் ஆரத்தி தட்டு அழகாக இருப்பதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

முத்து மற்றும் மணிகள்

முத்து மற்றும் மணிகள்

பெரும்பாலானோர் காப்பர் தட்டில் ஆரத்தி செய்வார்கள். ஏனெனில் அதனை பராமரிப்பு மிகவும் எளிமையானது மற்றும் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கக்கூடியது என்பதால் தான். ஆகவே அந்த காப்பர் தட்டில், முத்து அல்லது மணிகளைக் கோர்த்து கற்பனைக்கேற்ப அலங்கரிக்கலாம். இதுவும் ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.

பெயிண்ட்

பெயிண்ட்

ஆரத்தி தட்டில் விருப்பமான பெயிண்ட் அடித்து, அதில் முத்துக்களை பதித்து, விளக்குகள் மற்றும் வேண்டிய பொருட்களுக்கும் அதே நிற பெயிண்ட் அடித்து அலங்கரிக்கலாம். இதனால் விளக்கு ஏற்றும் போது, இது மிகவும் க்யூட்டாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri Aarti Thali Decoration: Ideas

Below are some of the ways in which you can use the items on the Navratri aarti thali. Take a look at these mind blowing ideas to make your Navratri plate look beautiful and outstanding.
Story first published: Wednesday, October 9, 2013, 18:24 [IST]
Desktop Bottom Promotion