For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டு பெண்கள் கருப்பா இருந்தாலும் லட்சணமா அழகா இருக்க காரணம் என்ன தெரியுமா?

By Maha
|

தமிழ்நாட்டு பெண்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும், அவர்கள் தான் ஆண்களால் அதிகம் கவரப்படுகிறார்கள். மேலும் தமிழ்நாட்டுப் பெண்கள் கெமிக்கல் கலந்த எந்த ஒரு அழகு சாதனப் பொருட்களையும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

மாறாக அவர்கள் நம் முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றி வந்த பயித்தம் பருப்பு, மஞ்சள் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களின் சருமத்தைப் பராமரித்து வருகிறார்கள். அதிலும் பயித்தம் பருப்பு தான் சோப்பிற்கு சிறந்த மாற்றாக தமிழ்நாட்டு பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க...

இதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்களின் சருமம் பருக்களின்றி, பொலிவோடு, லட்சணமாக காணப்படுகிறது. குறிப்பாத இதனை கோடையில் பயன்படுத்துவது நல்லது.

இங்கு அந்த பயித்தம் பருப்பைக் கொண்டு எந்த மாதிரியான சரும பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்யலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்கள்

பருக்கள்

கோடையில் பருக்கள் அதிகம் வரும். ஆகவே பயித்தம் பருப்பில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, பருக்களைப் போக்கலாம்.

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள் இருந்தால், பயித்தம் பருப்பு மாவில், சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

சரும சுருக்கங்கள்

சரும சுருக்கங்கள்

முதுமை தோற்றத்தைத் தள்ளிப் போட நினைத்தால், இரவில் படுக்கும் போது பயித்தம் பருப்பு மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.

வெள்ளைப்புள்ளிகள்

வெள்ளைப்புள்ளிகள்

வெள்ளைப்புள்ளிகளை நீக்க, பயித்தம் பருப்பு மாவுடன் பால் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மேலிருந்து கீழாக மசாஜ் செய்து, பின் கழுவினால், வெள்ளைப்புள்ளிகள் நீங்கும்.

சருமத்தை இறுக்க...

சருமத்தை இறுக்க...

தளர்ந்து காணப்படும் சருமத்தை இறுக்குவதற்கு, பயித்தம் பருப்புடன், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, காலையில் முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கழுவினால், தளர்ந்த சருமம் இறுக்கமடையும்.

நல்ல ஃபேஸ் வாஷ்

நல்ல ஃபேஸ் வாஷ்

வெளியே சுற்றி விட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல், பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் மென்மையாக இருக்கும்.

முகத்தில் வளரும் முடிகள்

முகத்தில் வளரும் முடிகள்

பெண்கள் முகத்திற்கு பயித்தம் பருப்பை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதற்கு பயித்தம் பருப்பை தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால், பயித்தம் பருப்பு மாவை, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு கழுவினால், எண்ணெய் பசை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Using Green Gram On Face In Summer

Summer is here to stay so it is important to make best use of natural ingredients to treat your skin. Here are some of the best ways to use green gram.
Desktop Bottom Promotion