For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் மேற்கொண்டால் சருமத்தின் நிறம் கருமையடையுமா?

By Maha
|

கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால் பலர், அந்த வெப்பம் தெரியாமல் இருக்க நீச்சல் பயிற்சியை மேற்கொள்வார்கள். ஏனெனில் நீரில் இருந்தால், வெப்பமானது அதிகம் தெரியாமல் இருக்கும் என்பதால். ஆனால் கோடையில் அப்படி நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலை மேற்கொண்டால், அது சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். ஏனென்றால் சில நீச்சல் குளங்களானது திறந்த வெளியில் இருப்பதால், சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்கி, சருமத்தின் நிறத்தை கருமையாக்கிவிடுகின்றன.

கோடையில் சருமம் கருமையாகாமல் அழகாக இருக்க சில டிப்ஸ்...

அதுமட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்ட பின்னர், ஒருசில செயல்களைப் பின்பற்றினால் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்கலாம். இல்லாவிட்டால், சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டு, சிவப்பு நிறத்தில் அலர்ஜி போன்று ஆகிவிடும்.

பொதுவாக கோடையில் சருமத்தின் நிறம் மாறுவது சாதாரணம் தான். ஆனால் நீச்சல் குளத்தில் நீச்சல் மேற்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்று சொன்னால் அனைவருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும். இங்கு நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்டால் எப்படி சருமத்தின் நிறம் மாறும் மற்றும் அப்படி சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திறந்தவெளி நீச்சல் குளம்

திறந்தவெளி நீச்சல் குளம்

அனைத்து நீச்சல் குளங்களுமே வெயிலின் தாக்கம் இல்லாதவாறு மூடி இருப்பதில்லை. சில நீச்சல் குளங்கள் திறந்தவெளியில் இருக்கும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் நேரடியாக பட்டு, சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். ஆகவே நீச்சல் செய்யும் முன், வாட்டர் ப்ரூஃப் சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

குளோரின்

குளோரின்

அனைத்து நீச்சல் குளங்களிலும் நீரை சுத்தமாக வைத்துக் கொள்ள குளோரின் பயன்படுத்தப்படும். ஆனால் அந்த குளோரின் சருமத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கும். அதிலும் சரும வறட்சி, சருமத்தின் நிறத்தை மாற்றுவது என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சுத்தமான நீரில் குளிக்கவும்

சுத்தமான நீரில் குளிக்கவும்

நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த பின்னர், நல்ல சோப்பை பயன்படுத்தி, சுத்தமான நீரால் உடலை நன்கு அலசினால், சருமத்தில் குளோரினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கலாம்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

பொதுவாக குளித்து முடித்த பின்னர், சருமமானது உடலில் உள்ள நீரை உறிஞ்சிவிடும். ஆகவே நல்ல தரமான எண்ணெய் பசை அதிகம் உள்ள மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

தக்காளி

தக்காளி

நீச்சல் மேற்கொண்ட பின், தக்காளியைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், அதில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது சருமத்தில் கருமை ஏற்படுவதைத் தடுக்கும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ்

தண்ணீர் மற்றும் ஜூஸ்

நீச்சல் ஒரு உடற்பயிற்சி. ஆகவே என்ன தான் தண்ணீரில் இருந்தாலும், உடலில் இருந்து நீர்ச்சத்தானது குறையும். அதிலும் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் இருப்பதால், அவை சருமத்தை வறட்சி அடையச் செய்யும். எனவே நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் மற்றும் ஜூஸை அதிகம் குடிக்க வேண்டும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழம் ஒரு அருமையான அழகுப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் வாழைப்பழமானது சரும கருமையைப் போக்கும் தன்மைக் கொண்டது. ஆகவே நீச்சல் முடித்து வீட்டிற்கு வந்த பின்னர், வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமையுடன், வறட்சியடையாமலும் இருக்கும்.

நீச்சலுக்கு பின்...

நீச்சலுக்கு பின்...

நீச்சல் மேற்கொள்ளும் போது சருமமானது நன்கு நீரில் ஊறி ஈரமாக இருப்பதால், சூரியக் கதிர்கள் படும் போது, சருமமானது எளிதில் பாதிப்படைகிறது. ஆகவே நீச்சலை மேற்கொள்ளும் முன்பும் சரி, பின்பும் சரி சன் ஸ்க்ரீன் லோசனை பயன்படுத்தாமல் வெயிலில் செல்ல வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Swimming Tan Your Skin?

Many people love to swim in the summers and they need to understand how they can prevent or reverse the effects of the pool on their skin. So here are some reasons why swimming does tan your skin and also what you can do to prevent it.
Desktop Bottom Promotion